A living worm in Brain சிறுவர்களுக்கான உலக செய்திகள்
உலகிலேயே முதன் முதலில் ஆஸ்திரேலிய பெண் ஒருவரின் மூளையில் இருந்து 8 சென்டி மீட்டர் நீளமான உயிருள்ள புழு கண்டுபிடித்து அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
64 வயதான ஆஸ்திரேலிய பெண் ஒருவர் இரண்டு ஆண்டுகளாக நிமோனியா, வயிற்று வலி போன்ற பல உடல் உபாதைகளால் அவதியுற்று வந்ததாக கூறப்படுகிறது.
அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் அப்பெண்ணின் மூளைக்குள் ஓபிடாஸ்காரிஸ் ராபர்ட்ஸி என்று அறியப்படும் 8 சென்டிமீட்டர் நீளமான உயிருள்ள ஒட்டுண்ணி புழுவை கண்டுபிடித்தனர்.அந்த பெண் தனது குடியிருப்புக்கு அருகில் இருந்து கீரைகளை சேகரித்து எடுத்த போது ஒட்டுண்ணியின் முட்டை உடலுக்குள் நுழைந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Kidhours – A living worm in Brain
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.