Tuesday, December 3, 2024
Homeசிறுவர் செய்திகள்இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்திய 500 கிலோ எடையுள்ள வெடிக்காத குண்டு மீட்பு 2nd...

இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்திய 500 கிலோ எடையுள்ள வெடிக்காத குண்டு மீட்பு 2nd World War Remains

- Advertisement -

2nd World War Remains  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

இரண்டாம் உலகப் போரின் 500 கிலோ எடையுள்ள வெடிக்காத குண்டு ஒன்று இங்கிலாந்தில் மீட்கப்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டு இரண்டாம் உலக போரில் இங்கிலாந்தில் வீசப்பட்டு வெடிக்காத பல குண்டுகளில் ஒன்று என வெடிகுண்டு நிபுணர்கள் தெரிவித்தனர்.

இங்கிலாந்தின் தென்மேற்கில் உள்ள டேவன் (Devon) பிராந்தியத்தில் உள்ளது பிளைமவுத் (Plymouth) துறைமுக நகரம். Plymouth செயின்ட் மைக்கேல் அவென்யு (St. Michael Avenue) பகுதியில் வசித்து வந்த ஒருவர் தனது மகளின் வீட்டின் பிற்பகுதியை விரிவாக்கம் செய்ய கட்டுமான நிபுணருடன் ஆலோசித்து பணிகளை தொடங்கினார்.
மண்வெட்டியினால் அங்கு தோண்டும் போது ஒரு பொருளின் மீது அது இடித்தது.

- Advertisement -

உடனடியாக வெளியே எடுக்க முடியாத அளவிற்கு பெரிதாக இருந்த அந்த பொருளை நீண்ட முயற்சிக்கு பிறகே அவர்களால் காண முடிந்து. இதனையடுத்து தனது மனைவியின் ஆலோசனையின் பேரில், பெரிய உலோக உருண்டை வடிவிலான அந்த பொருளின் புகைப்படங்களை , அதிகாரிகளுக்கு அனுப்பினார்.
சுமார் 15 நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில், அவர் வீட்டிற்கு பொலிஸாரும் வெடிகுண்டு நிபுணர்களும் வந்திறங்கினர்.

- Advertisement -

அந்த பொருள் ஒரு “வெடிகுண்டு” என்றும் அதை செயலிழக்க செய்யும் நடவடிக்கைகளுக்காக வந்துள்ளதாக தெரிவித்த அவர்கள், அந்த வீட்டின் சுற்றுப்பகுதியில் உள்ள அனைவரையும் தொலைதூரம் அனுப்பியதுடன் அப்பகுதி முழுவதும் ராணுவ கட்டுப்பாட்டில் வந்தது.

அந்த உலோக பொருள் இரண்டாம் உலக போர் காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளில் ஒன்று என்பதால், அதனை அங்கேயே வெடிக்க முயன்றால் பல வீடுகள் நாசமடையலாம் என்பதால் ஆட்கள் நடமாட்டமில்லாத சாலைகளின் வழியே எடுத்து சென்று, பின் ஒரு பெரிய காற்றடைத்த ரப்பர் படகில் ஏற்றி, கடலில் நீண்ட தூரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

2nd World War Remains  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
2nd World War Remains  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

பின்னர் வெடிகுண்டு நிபுணர்களின் மேற்பார்வையில், எந்த பாதிப்புமின்றி அந்த குண்டு கடலில் வெடிக்க செய்யப்பட்டது. அதேசமயம் சுமார் 4 மணி நேரத்திற்கு பிறகே அப்பகுதி மக்கள் வீடுகளுக்கு திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.

அதேசமயம் அந்த வெடிகுண்டு வெடித்தால் அதன் தாக்கம் 4,300 கட்டிடங்களுக்கும், பொதுமக்களில் 10,320 பேருக்கும் இருந்திருக்கும் என பிளைமவுத் நகர கவுன்சில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Kidhours – 2nd World War Remains

 

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

தேடல்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.