2000 Old City சிறுவர்களுக்கான உலக செய்திகள்
2012 இல் மாயன் நாட்காட்டி முடிகிறது. அதனால் உலகம் அழிந்துவிடும் என்று பரபரப்பாக பேசப்பட்டது. 2012 இல் உலகம் எந்த மாற்றமும் பெறவில்லை. அதன் பிறகு மாயன் நாகரிகம் பற்றி செய்திகள் எதுவும் பெரிதாக பேசப்படவில்லை. ஆனால் இப்போது மீண்டும் மக்களின் பார்வைக்கு மாயன் நகரம் ஒன்று வந்துள்ளது.
மத்திய அமெரிக்க பகுதியில் 4000 ஆண்டுகளுக்கு முன் இருந்ததாக கருதப்படும் மாயன் நாகரிகத்தின் எச்சம் ஒன்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மெக்ஸிகோ எல்லைக்கு அருகாமையில் அமைந்துள்ள மிராடோர்-கலக்முல் கார்ஸ்ட் பேசின் என அழைக்கப்படும் பசுமையான காட்டு பகுதி உள்ளது.
அங்குள்ள 650 சதுர மைல் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் மழைக்காடுகளுக்கு அடியில் புதைந்துள்ள ஒரு பெரிய மாயன் நகரத்தின் இடிபாடுகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். வடக்கு குவாத்தமாலாவை வான்வழியாக ஆய்வு செய்த போது இது தெரியவந்துள்ளது.
![காடுகளுக்குள் 2000 ஆண்டுகள் பழைய நகரம் 2000 Old City 1 2000 Old City சிறுவர்களுக்கான உலக செய்திகள்](https://www.kidhours.com/wp-content/uploads/2023/01/Untitled-design-2023-01-18T214958.437.jpg)
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுப்படி, இந்த நகரம் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்திருக்க வேண்டும். 110 மைல் நீளமுள்ள தரைப்பாதைகளால் இணைக்கப்பட்ட சுமார் 1,000 குடியிருப்புகல் இங்கே இருக்கலாம் என்று அவர்கள் மதிப்பிடுகின்றனர்.
மக்கள் பயணிக்கக்கூடிய தரைப்பாதைகள் இருப்பதால் மாயன் நாகரிகத்தில் பல நகரங்கள் அருகருகே இருந்திருக்கலாம், அதை இணைக்க இந்த சாலை முறைகள் அமைக்கப்பட்டிருக்கலாம் என்பது தெரிகிறது.
பல அமெரிக்க பல்கலைக்கழகங்கள், பிரான்ஸ் மற்றும் குவாத்தமாலாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு இணைந்து இந்த ஆராய்ச்சியை நடத்தினர். சாதாரண ரேடியோ அலைகளை பயன்படுத்தாமல் Lidar எனப்படும் ஒளி கண்டறிதல் மற்றும் வரம்பு முறையை பயன்படுத்தி இந்த புதைந்த நகரத்தை கண்டுபிடித்துள்ளனர்.
Lidar மழைக்காடுகளுக்குள் ஊடுருவி அவற்றின் அடியில் இருப்பதை வெளிப்படுத்தும் என்பதால் ஆராய்ச்சியாளர்கள் இதைப் பயன்படுத்த முடிவு செய்தனர். ஆராய்ச்சியாளர்கள் சில குடியிருப்புகளில் பெரிய தளங்கள் மற்றும் பிரமிடுகளின் ஆதாரங்களைக் கண்டறிந்துள்ளனர்.
இது அவர்களின் வேலை, அரசியல் மற்றும் பொழுதுபோக்குக்கான மையமாக செயல்பட்டிருக்கலாம் என்று கருதுகின்றனர். விளையாட்டு மைதானங்களுக்காக தடயங்களும் உள்ளன.
நாகரிகத்தின் மக்கள் நீர் மேலாண்மைக்கு கால்வாய்களையும், வறண்ட காலங்களுக்கு அதைப் பயன்படுத்துவதற்கு நீர்த்தேக்கங்களையும் கட்டினார்கள் என்றும் ஆராய்ச்சியாளர்கள் யூகிக்கின்றனர்.
Kidhours – 2000 Old City
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.