post stamp பொது அறிவு செய்திகள்
கனடாவில் சுமார் மூன்று லட்சம் டொலர்களுக்கு அரிய வகை தபால் முத்திரையொன்று விற்பனை செய்யப்பட்டுள்ளது.ஒட்டாவா ஏல விற்பனையில் இவ்வாறு தபால் முத்திரை விற்பனை செய்பய்பட்டுள்ளது.
1851ம் ஆண்டில் வெளியிடப்பட்ட12-Penny Black என்னும் தபால் முத்திரையே இவ்வாறு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்த தபால் முத்திரையில் பிரித்தானிய மஹாராணி விக்டோரியாவின் படம் பொறிக்கப்பட்டுள்ளது.
பெயர் குறிப்பிடப்படாத நபர் ஓருவர் 292500 டொலர்களுக்கு இந்த தபால் முத்திரையை கொள்வனவு செய்துள்ளதாக ஸ்பார்க் ஏல விற்பனை நிறுவனத்தின் பொது முகாமையாளர் பீட்டர் மெக்டொனால்ட் தெரிவித்துள்ளார்.
இந்த தபால் முத்திரையை ஏலத்தில் கொள்வனவு செய்த நபர் இதே மாதிரியான தபால் முத்திரையொன்றை கடந்த 2017ம் ஆண்டு 327000 டொலர்களுக்கு கொள்வனவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Kidhours – post stamp
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.