Hindus are Rich சிறுவர்களுக்கான உலக செய்திகள்
இப்போதெல்லாம் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா போன்ற வளர்ந்த நாடுகளில் இந்தியர்களின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெறத் தொடங்கிவிட்டார்கள் இந்தியர்கள்.
ஒரு காலத்தில் நம்மை ஆண்ட இங்கிலாந்து நாட்டின் பிரதமராக ரிஷி சுனக் என்கிற இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் இருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஐடி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியர்கள் கோலோச்சி வருவதால் அவர்களை வெளிநாடுகள் இருக்கரம் கூப்பி வரவேற்கத்தான் செய்கின்றன. இதனால் வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.
இந்நிலையில் இங்கிலாந்து நாட்டில் இந்துக்களின் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மக்கள் தொகை கணக்கீட்டு தகவல்களில் இருந்து சில சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன.
இங்கிலாந்தில் 2021 மார்ச் மாதம் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் கிடைக்கப்பெற்ற விபரங்கள் அடிப்படையில், சமீபத்தில் Religion by housing, health, employment and education என்ற ஆய்வறிக்கையை அந்நாட்டு தேசிய புள்ளியல் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதன் மூலம் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
Kidhours – Hindus are Rich
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.