11 Days flying bird பொது அறிவு செய்திகள்
அலாஸ்காவில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு பட்டைவால் மூக்கன் என்ற பறவை 13ஆயிரத்து 569 கிலோமீட்டர் தூரம் பறந்து சாதனை படைத்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் 13ஆம் திகதி அன்று பயணத்தை தொடங்கிய இந்த பறவை சுமார் பதினொரு நாட்கள் எங்கும் நிற்காமல் பறந்து சென்றது 5ஜி செயற்கைக்கோள் மின்பட்டை (tag) மூலம் கண்டறியப்பட்டு உள்ளது.
அலாஸ்காவில் இருந்து பறக்கத் தொடங்கிய இந்த பறவை கிழக்கு டாஸ்மேனியாவில் உள்ள Ansons விரிகுடாவின் கரையில் தரை இறங்கியது.
இதற்கு முன்பு இதே இனத்தைச் சேர்ந்த பறவை 2020ஆம் ஆண்டு 217 மைல்கள் பறந்ததே சாதனையாக இருந்து வந்தது.
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.