Dual Citizen Europe Country சிறுவர்களுக்கான உலக செய்திகள்
புதிய சட்டமூலத்தினால் ஜேர்மனியில் குடியுரிமை பெறுவதில் நிலவி வந்த சிக்கல்கள் குறைவடையுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய நாள் வரை ஜேர்மனியில் இரட்டைக் குடியுரிமை தடை செய்யப்பட்டுள்ள நிலையில் இனிவரும் காலங்களில் அதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
ஜேர்மனி பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸ் (Olaf Scholz) கொண்டுவந்திருக்கும் இந்த சட்டமூலம், 382-234 எனும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்நிலையில், இரட்டை குடியுரிமைக்காக ஜேர்மனியில் 8 வருடங்கள் வசித்தவர்கள் மாத்திரமே இதற்கு விண்ணப்பிக்க முடியும்.

அதேவேளை, குறித்த சட்டமூலம் சட்டமாக மாறினால் ஜேர்மனியில் 5 வருட காலங்கள் வசித்தவர்களும் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
Kidhours – Dual Citizen Europe Country
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.