Chinese Chaste Leaves in Tamil / நொச்சி இலை
மலைப்பகுதியில் வளரும் மூலிகை இலைகளில் மிகச்சிறந்த மூலிகை நொச்சி என்று சொல்லலாம். இவை தோட்டப்பகுதியிலும் வயல்வெளிகளிலும் இயல்பாக இருக்க கூடும். களைச்செடிகளில் இவையும் ஒன்று என்று நொச்சியை கூறுகிறார்கள்.
நொச்சி புதர்ச்செடியாகவும், மரமாகும் வளரக்கூடியது. நொச்சியில் குறிப்பிடத்தக்கது வெண் நொச்சி, கரு நொச்சி, நீர் நொச்சி ஆகும்.
கருநொச்சி சித்தமருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இந்த செடியின் வேர், பட்டை, விதை, பூக்கள் என முழுத்தாவரமுமே மருத்துவ குணங்கள் நிறைந்தவை. நொச்சியின் வேர்ப்பகுதிக்கு பாம்பு விஷத்தை முறிக்கும் தன்மை உள்ளது என்று ஆய்வு தெரிவிக்கிறது. நொச்சி தரும் பயன்கள் குறித்து தெரிந்துகொள்வோம்.
பொதுவாக நாம் நம் ஊர் தோட்டப் பகுதிகளில் வயல்வெளிகளில் பல்வேறு தாவரங்கள் தானாக முளைத்துக் கிடப்பதைப் பார்த்திருப்போம்! இவைகளெல்லாம் களைகள் என விவசாயிகள் பிடுங்கி எறியக்கூடும். ஆனால், அந்த செடிகள் ஒவ்வொன்றிற்குள்ளும் ஒவ்வொரு விதமான தன்மை உண்டு! அவை ஒரு வேளை சிறந்த மூலிகையாகவும் கூட இருக்கலாம்.
அபூர்வமான தாவரம் நொச்சி. இதன் பூ, இலை, வேர், பட்டை என அனைத்தும் மருத்துவ பலனளிக்கும். வீடு களில், மிக சாதாரணமாக வளர்க்கலாம். ஆடு, மாடு போன்ற கால்நடைகள் இதை உண்பதை தவிர்க்கும். நொச்சி இலையை நீரில் கொதிக்க வைத்து, ஆவி பிடித்தால், மூக்கடைப்பு, ஜலதோஷம் தீரும்.
இதில் தயாரிக்கப்படும் தைலம், காசநோயால் ஏற்படும் புண்களை குணமாக்கும். உடலில் ஏற்படும் தேமல் நோய், நொச்சி இலை சாறை பூசி வர மறையும். மூட்டு வலி குணமாகும்.
Kidhours – Chinese Chaste Leaves in Tamil
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.