Cassava Tuber Herbal மூலிகைகளை சேகரிப்போம்
மரவள்ளிக்கிழங்கு எல்லா இடங்களிலும் கிடைக்கும் பொதுவான உணவாகும். இது நம் நாட்டில் மலை மற்றும் வறண்ட பகுதிகளில் பரவலாக வளரும் ஒரு மருத்துவ குணம் கொண்ட கிழங்கு. மரவள்ளிக்கிழங்கு சீரக நீர், கேரள மக்கள் இந்த கிழங்கை தினமும் அதன் உயிர் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்காக பயன்படுத்துகின்றனர்.
தோசை, ஆத்தா, உப்புமா மற்றும் இனிப்பு மற்றும் காரமான உணவுகள் போன்ற அனைத்து வகையான சிற்றுண்டிகளையும் செய்ய மரவள்ளிக்கிழங்கைப் பயன்படுத்தலாம். சமைக்கும் போது இதை சாம்பாரில் சேர்க்கவும். மரவள்ளிக்கிழங்கில் கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. மரவள்ளிக்கிழங்கை சாப்பிட்ட பிறகு ஒரே நாளில் இஞ்சி அல்லது சுக்கு சாப்பிட வேண்டாம். மரவள்ளிக்கிழங்கின் தன்மை உடலுக்கு விஷம். மரவள்ளிக்கிழங்கு குச்சிகள் அல்லது உருண்டைகளைச் சேர்த்து, எண்ணெயில் பூசினால், “மரவல்லி சிப்ஸ்” எனப்படும் சுவையான மொறுமொறுப்பான சிற்றுண்டி கிடைக்கும்.
சாதாரணமாக அனைத்து இடங்களிலும் கிடைக்கும் உணவுப் பொருள் மரவள்ளிக் கிழங்கு.இது நம் நாட்டில் பரவலாக மலைப்பாங்கான இடங்கள் மற்றும் வறண்ட நிலப்பகுதிகளில் விளையும் மருத்துவ பயன்கள் கொண்ட கிழங்கு வகையாகும். தினமும் கேரள மக்கள் இந்தக் கிழங்கைப் பயன்படுத்தக் காரணம் மரவள்ளிக்கிழங்கின் சீரகத்தண்ணீருமே, அவர்களின் சுறுசுறுப்புக்கும், வியாதிகள் அணுகாத் தன்மைக்கும் காரணம் என்கின்றனர்.
மரவள்ளிக்கிழங்கு மாவில் தோசை, அடை, உப்புமா போன்ற எல்லாவகை சிற்றுண்டிகளையும், இனிப்பு கார வகைகளையும் செய்யலாம். மேலும் சமையலில், சாம்பாரில் சேர்க்கலாம் மற்றும் கூட்டு, பொரியலாக செய்யலாம். மரவள்ளிக் கிழங்கில் கார்போஹைட்ரெட், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் C சத்து மிகுந்துள்ளது.
மரவள்ளிக்கிழங்கு சாப்பிடும்போதோ அல்லது சாப்பிட்டபின்போ அன்றைய நாளில் இஞ்சி அல்லது சுக்கு சாப்பிடக்கூடாது. மரவள்ளிக்கிழங்கின் தன்மையால், அவை உடலுக்கு விஷமாக மாறிவிடும்.மரவள்ளிக்கிழங்கை குச்சிகள் போல சீவி, அல்லது வட்ட வடிவில் சீவி, எண்ணையில் இட்டு பொறித்து, அவற்றை “மரவள்ளி சிப்ஸ்” என்ற பெயரில் சுவையான நொறுக்குத்தீனியாக தயாரிக்கின்றனர்.
மரவள்ளி கிழங்கில் உள்ள இரும்பு சத்து ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியில் உதவுவதால் இரத்த சிவப்பணுக்கள் குறைபாட்டினால் ஏற்படும் அனீமியா போன்ற நோய்களை குணப்படுகிறது. மேலும் அதிக ஆக்ஸிஜன் உடல் உறுப்புகளுக்கு செலுத்தப் பயன்படுகிறது.
மரவள்ளிக்கிழங்கில் உள்ள நார்ச்சத்து உணவு செரிமானத்தில் உதவி புரிகிறது.உடலில் உள்ள நச்சுக்களை கழிவாக வெளியேற்றி மலச்சிக்கல், குடல் வலி, குடல் புற்றுநோய் ஆகியவை ஏற்படாமல் பாதுகாக்கிறது.
கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு நரம்புக் குறைபாடுகள் ஏற்படாமல் பாதுகாக்க இந்தக் கிழங்கில் காணப்படும் ஃபோலேட்டுகள் என்ற பி தொகுப்பு விட்டமின்கள் பயன்படுகிறது.
மரவள்ளி கிழங்கின் நன்மைகள்
மரவள்ளியில் உள்ள இரும்புச்சத்து, கால்சியம், விட்டமின் K ஆகியவை எலும்புகளின் உற்பத்தி மற்றும் பராமரிப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனை வயதானவர்கள் எடுத்துக் கொண்டால் ஆஸ்டியோபோரேஸிஸ் உள்ளிட்ட எலும்பு சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
மரவள்ளியானது அதிகளவு கார்போஹைட்ரேட்டைக் கொண்டுள்ளது. இதனால் உடல் எடையினை அதிகரிக்க விரும்புவோர் இக்கிழங்கினை உண்டு பயன் பெறலாம்.
வேக வைத்த மரவள்ளிக்கிழங்கு, உடலுக்கு ஆற்றலைத் தரும்.மேலும் ஞாபக மறதி வியாதியை குணப்படுத்தும். உடலில் நீரின் அளவை, சரியாக்கும். இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்து, மெட்டபாலிசம் எனப்படும் உடலின் வளர்சிதை மாற்றத்தை சீராக்கும்.
வயிற்றுப்புண் குணமாக , இதிலிருந்து தயாராகும் ஜவ்வரிசியை நீர் விட்டு கொதிக்க வைத்து, கஞ்சி போல சில வேளைகள் பருகிவரலாம்.
ஜவ்வரிசி நீரை மோரில் உப்பு கலந்து பருகிவர, உடல் சூட்டினால் உண்டான வயிற்று வலி குணமாகும், உடலுக்கு ஆற்றல் உண்டாகும்.
மரவள்ளிக்கிழங்கு மாவில் கஞ்சி செய்து, பால், பனை வெல்லம் கலந்து குழந்தைகள் முதல் பெரியோர் வரை சாப்பிட, உடலுக்கு சத்துக்கள் கிடைக்கும்.
Kidhours – Cassava Tuber Herbal, Cassava Tuber Herbal plant,Cassava Tuber Herbal tree
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.