Tamil Healthy Tips சிறுவர் சுகாதாரம்
மணி பிளான்ட் என்பது ஒரு கொடி. இன்று பலர் வீடுகளில் மணி பிளான்டை சர்வ சாதாரணமாக காண முடிகிறது. காரணம் இது பணம் கொட்டும் என்பதை விட வீட்டிற்கு அழகு சேர்க்கிறது என்பதே முதன்மை காரணம்.
அதோடு அதன் வளர்ச்சி நம்மை பாசிட்டிவாக மாற்றுகிறது. அதுமட்டுமன்றி மணி பிளான்டை வளர்க்க அதிகமாக மெனக்கெடத் தேவையில்லை. சூரியன் வெளிச்சம் கொஞ்சம் கிடைத்தாலே போதுமானது அது நன்கு வளர்ந்துவிடும். அதேபோல் இதற்கு அதிக பராமரிப்பும் தேவைப்படாது.பச்சை பசேலென அதிக பராமரிப்பு இல்லாமல் வளரும் இந்த செடிக்கு மண் வளம் கூட தேவையில்லை. ஒரு ஜார் தண்ணீரில் ஒரு காம்பை கிள்ளி வைத்தாலும் அது நன்கு வளரும். எனவேதான் வீட்டிற்குள்ளேயும் பலர் இண்டோர் பிளான்டாக வளர்க்கின்றனர்.
அவ்வாறு வீட்டிற்குள் பச்சை பசேலென கண்களுக்கு குளிர்ச்சியாக இந்த மணி பிளான்ட்டுகளை காணும்போது மனதிற்குள் அமைதியை கொடுக்கிறது. வீட்டையும் அலங்கரிக்கிறது. தூய காற்றை சுவாசிக்க நினைத்தாலும் மணி பிளான்ட்டை வீட்டிற்குள் இண்டோர் பிளான்டாக வளர்க்கலாம்.இப்படி பல வழிகளில் சௌகரியமாக இருப்பதாலேயே பலரும் மணி பிளான்ட்டை வீட்டில் வளர்க்க விரும்புகின்றனர். அவ்வாறு வீட்டிற்குள் பச்சை பசேலென கண்களுக்கு குளிர்ச்சியாக இந்த மணி பிளான்ட்டுகளை காணும்போது மனதிற்குள் அமைதியை கொடுப்பதுடன் வீட்டையும் அலங்கரிக்கிறது. தூய காற்றை சுவாசிக்க நினைத்தாலும் மணி பிளான்ட்டை வீட்டிற்குள் இண்டோர் பிளான்டாக வளர்க்கலாம்.
இப்படி பல வழிகளிலும் நமக்கு சௌகரியமாக இருப்பதாலேயே பலரும் மணி பிளான்ட்டை வீட்டில் வளர்க்க விரும்புகின்றனர். காடுகளில் வளரக்கூடிய மணி பிளான்டுகள் 50 முதல் 60 அடி உயரம் வரை வளரும். ஆனால் வீட்டில் அழகுக்காக வளர்க்கும் செடிகள் 15-20 அடி மட்டுமே வளரும்.எனவே மணி பிளான்ட் வளர்க்க நீங்களும் முடிவு செய்துவிட்டால் தென்கிழக்கு திசையில்தான் மணி பிளான்டை வைக்க வேண்டுமாம். ஏனெனில் அந்த திசையில்தான் பாசிடிவ் எனர்ஜி அதிகமாக கிடைக்கும் என்றும் அந்த இடத்தில் வைக்கும்போது நன்கு வளரும் என்றும் கூறுகின்றனர்.
அதேபோல் மணி பிளான்டை வடகிழக்கு திசையில் வைத்து வளர்கக் கூடாது. ஏனெனில் இது நெகடிவ் எனர்ஜி தரும் திசை என்பதால் அது மனதளவில் கவலைகள், நிம்மதியின்மையை தரலாம். அதோடு செடியும் மெதுவாகவே வளரும் பட்டுப்போகும் என்கின்றனர்.
ஏற்கெனவே நீங்கள் செடி வளர்க்கிறீர்கள் எனில் பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்க தென்கிழக்கு திசையில் மாற்றி வைத்துப் பாருங்கள். அது உங்களுக்கு பாசிட்டிவ் எனர்ஜி தரும் என சொல்லப்படுகின்றது.
kidhours – Tamil Healthy Tips
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.