Prevention of Liver Cancer சிறுவர் சுகாதாரம்
கல்லீரல் புற்றுநோய் புற்றுநோய் வகைகளிலே கொஞ்சம் ஆபத்தானது தான். ஏனெனில் கல்லீரல் தான் நம் உடலின் செயல்பாடுகளில் பெரும்பாலானவற்றை நம்முடைய கல்லீரல் தான் செய்கிறது. அதில் புற்றுநோய் செல்கள் உருவானால் ஒட்டுமொத்த உடல் செயல்பாடுமே பாதிககும். சரி, இந்த கல்லீரல் புற்றுநோய் வராமல் தடுப்பது எப்படி, இதன் ஆரம்ப கால அறிகுறிகள், ஆபத்து காரணிகள் என்னென்ன, கல்லீரல் புற்றுநோய்க்கு சிகிச்சைகள் இருக்கின்றனவா, தடுப்பூசி பயன் தருமா என்பது பற்றி இங்கே விரிவாக தெரிந்து கொள்ளலாம் வாங்க.
கல்லீரல் மனித உடலின் ராஜ உறுப்பு என்று கூறப்படுகிறது. இந்த கல்லீரலில் புற்றுநோய் செல்கள் உருவாகி வளர்வது ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து விட்டால் அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டு குணப்படுத்த முடியும். அதற்கு அதனுடைய ஆரம்ப கால அறிகுறிகள் பற்றியும் கல்லீரல் புற்றுநோயின் தன்மை மற்றும் அதுகுறித்த விழிப்புணர்வும் மிக அவசியம்.
கல்லீரல் புற்றுநோயின் அறிகுறிகள்
வயிற்று வலி – கல்லீரல் இருக்கும் பகுதியில் வயிற்றில் கடுமையான வலி ஏற்படும். புற்றுநோய் செல்கள் வளர வளர வலியும் அதிகரிக்கும்.
எடை குறைதல் – கல்லீரல் புற்றுநோயின் முக்கியமான அறிகுறிகளில் ஒன்று அதீத உடல் சோர்வும் உடலில் ஆற்றல் இழப்பும் ஏற்படும். இதனால் விவரிக்க முடியாத அளவுககு திடீர் எடை இழப்பு உண்டாகும்.
வாந்தி, மயக்கம் – ஜீரண மண்டலத்தினுடைய முக்கிய செயல்களைச் செய்யக்கூடியது கல்லீரல் தான். அது பாதிக்கப்படும்போது ஜீரண மண்டலத்தின் ஒட்டுமொத்த செயலுமே பாதிக்கும். பித்தநீர் உற்பத்தியில் பிரச்சினை உள்ளிட்டவற்றால் வாந்தி, மயக்கம் உள்ளிட்டவை ஏற்படும்.
அதீத பசியுணர்வு – கல்லீரல் புற்றுநோயின் முக்கியமான அறிகுறி இது. சாப்பிட்டு முடித்தவுடனேயே விரைவில் பசி எடுக்க ஆரம்பித்து விடும். கடுமையான பசி உணர்வு இருக்கும்.
மஞ்சள் காமாலை – மஞ்சள் காமாலை எவ்வளவு ஆபத்தானது என்று நமக்குத் தெரியும். அதை கண்டறிந்து சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காத போது அதுவும் கல்லீரல் புற்றுநோயின் அறிகுறியாக மாறக்கூடும்.
தவிர்க்க வேண்டியவை
1.ஆல்கஹால் மற்றும் புகைப்பிடித்தல்,
2.வறுத்த மற்றும் பொரித்த உணவுகள்,
3.அதிக கொழுப்புள்ள உணவுகள்,
4.பதப்படுத்தப்பட்ட உணவுகள்,
5.சிவப்பு இறைச்சி மற்றும் பதப்படுத்திய இறைச்சி வகைகள்,
6.கார்பனேட்டட் பானங்கள்,
7.அதிக சோடியம் உள்ள உணவுகள்,
8.அதிக கார்போ மற்றும் பேக்கரி உணவுகள்,
9.துரித உணவுகள்,
ஆகியவற்றைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவுகள்
1.காலிஃபிளவர், ப்ரக்கோலி உள்ளிட்ட பச்சை காய்கறிகள், கீரைகள், மற்றும் பெர்ரி உள்ளிட்ட பழ வகைகள்,
2.வைட்டமின் சி நிறைந்த உணவுகள்,
3.ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் அதிகமுள்ள உணவுகள்,
4.மிதமான அளவு புரதங்கள்,
5.ஓட்ஸ், கீன்வா உள்ளிட்ட முழு தானியங்கள்,
6.ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகள்,
7.மிளகு, எலுமிச்சை, மஞ்சள், பூண்டு> க்ரீன் டீ உள்ளிட்ட அழற்சி எதிர்ப்பு பண்பு கொண்ட உணவுகள்
8.ஆலிவ் ஆயில், நட்ஸ் மற்றும் விதைகள்,
குறைந்த கொழுப்புள்ள பால் மற்றும் தயிர்,
அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்,
இந்த உணவுமுறையைப் பின்பற்றும்போது நோய்த்தொற்று மற்றும் இன்ஃபிளமேஷன்களைக் குறைப்பதோடு நோயெதிர்ப்பு மண்டலத்தையும் பலப்படுத்தி விரைவாக நோயிலிருந்து மீள முடியும்.
Kidhours – Prevention of Liver Cancer
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.