Tamil Health Tips – சிறுவர் சுகாதரம்
வாரத்துல எல்லா நாளும் Non-Veg சாப்பிட்டால் கூட அசைவ பிரியர்களுக்கு சலிக்காது. அதுவும், வாராவாரம் ஏதாச்சும் புதுசு புதுசா ஏதாவது சாபிலாம்னுதான் அசைவ பிரியர்கள் நினைப்பார்கள். அடுத்து என்ன Non-Veg ட்ரை பண்ணலாம்னு யோசிக்கிறீங்கனா சமீப காலமா பிரபலமா ஆகுற இந்த கடக்நாத் கோழி பற்றிஅறிந்துகொள்ளுங்கள்.
கடக்நாத் அல்லது கருங்கோழி அப்படிங்கறது இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தோட நாட்டுக்கோழிகள் . இந்தக் கோழியோட இறக்கை, கறி, ரத்தம், முட்டைனு எல்லாமே கருப்பு நிறத்துல தான் இருக்குமாம். இந்தக் கறுப்பு கோழியில மெலனின் அப்படிங்கிற நிறமி அதிகமா இருக்கிறதாலதான் இந்த கோழி கருப்பா இருக்காம்.
அதோடு யுனானி போன்ற வைத்தியமுறைகள்ல எல்லாம் இந்தக் கோழியோட மருத்துவகுணம் பற்றி சிறப்ப சொல்லப்பட்டிருக்காம். கறுப்பு கோழியைச் சாப்பிடுறதுனால, அதுல இருக்க மெலனின்தன்மை காரணமாக நரம்புகள் வலுவடைந்து, நல்லா விரிவடையும்னு, நரம்புத் தளர்ச்சி போன்ற பிரச்னைகள் உள்ளவர்களுக்கு இது ரொம்ப நல்லது.
அதுமட்டும் இல்லை, மைசூரில் இருக்குற உணவு ஆராய்ச்சி மையம், இந்த கருங்கோழியில இருக்க கொழுப்பு ரொம்ப தரமானதாம். எல்லா நாட்டுக்கோழிங்களையும் போலவே இந்த கோழியோட ஒயிட் மீட் என்பதும் ரொம்ப சத்தானது.அதோடு இதைச் சாப்பிடுறதுனால ரத்தம் அழுத்தம் கட்டுப்படுத்தப்படுமாம். இதய நோய் பிரச்சினை இருக்கவங்களுக்கும் இது ரொம்ப நல்லது என்றும் கூறுகின்றார்கள். மலைவாழ் மக்கள் இந்தக் கோழி ஆண்மை விருத்திக்கு மிகவும் நல்லது என கூறுகின்றனர்.
அதேபோல மாதவிடாய் பிரச்சினைகள் உள்ள பெண்களுக்கு இந்த கருங்கோழிக்கறி நல்ல பயனை கொடுக்குமாம். கடக்நாத் கோழியோட முட்டையும் கருப்பு நிறத்துல தாங்க இருக்கும். எல்லா நாட்டுக்கோழியோட முட்டை இருக்குற மாதிரியே இதுலயும் நல்ல கொழுப்பு நிறைய இருப்பதனால் வளரும் குழந்தைங்களுக்கு இது சத்தான ஒரு உணவு.
மற்ற முட்டைகளைவிடவும் இதுல அமினோ அமிலங்கள் எல்லாம் அதிகம் இருக்குனும் சொல்றாங்க. பிரசவத்துக்கு அப்புறம் வர தலைவலி, ஆஸ்துமா, சிறுநீரக வீக்கம் மாதிரியான பிரச்சினைகளுக்கு எல்லாம் இந்த கருங்கோழி முட்டை சிறந்த மருந்தா இருக்கின்றதாம்.
ஆண்களுக்கு ஆண்மைத் தன்மையை அதிகரிப்பதுடன் விந்தணுக்களின் வீரியத்தையும் அதிகரிக்குமாம்.
ஹோமியோபதி மருத்துவத்துல, நரம்புத் தளர்ச்சி இருக்கவங்களுக்கு இந்த கருங்கோழி இறைச்சியை சாப்பிட பரிந்துரைக்கிறார்கள். இந்த கோழிக்கறியில 25 சதவிதம் புரதச்சத்தும் வெறும் 0.73 -1.05 சதவீதம் மட்டுமே கொலஸ்ட்ரால் இருக்கறதாவும் சொல்லப்படுகின்றது.
எனவே இதனை இரத்த கொதிப்பு, இதய நோய் பாதிப்புக்கு உள்ளவர்களும் கருங்கோழி இறைச்சியினை எந்த பயமும் இல்லாம சாப்பிடலாமாம்.
kidhours – Tamil Health Tips ,Tamil Health Tips for youngers,Tamil Health Tips news – சிறுவர் சுகாதரம்
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.