Sunday, October 6, 2024
Homeகல்விபொது அறிவு - உளச்சார்புஉலகின் புத்திசாலி மாணவர்கள் பட்டியல் Smartest Students

உலகின் புத்திசாலி மாணவர்கள் பட்டியல் Smartest Students

- Advertisement -

Smartest students  பொது அறிவு செய்திகள்

- Advertisement -

உலகின் புத்திசாலி மாணவர்கள் பட்டியலில் இந்திய-அமெரிக்க மாணவி நடாஷா பெரியநாயகம் (13) தொடர்ந்து 2-வது முறையாக இடம் பிடித்துள்ளமை மகிழ்ச்சியை ஏர்படுத்தியுள்ளது.

அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் நிறுவனம் ‘ஜான்ஸ் ஹாப்கின்ஸ் சென்டர் பார் டேலன்டடு யூத்’ (சிடிஒய்). ஆண்டுதோறும் உலகம் முழுவதும் உள்ள மாணவர்களுக்கு சிடிஒய் ஒரு தேர்வை நடத்தி பிரகாசமான மாணவர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இதில் மாணவர்கள் பயிலும் வகுப்புக்கும் மேற்பட்ட வகுப்புகளுக்குரிய பாடதிட்டங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன.

- Advertisement -

 

- Advertisement -
Smartest students  பொது அறிவு செய்திகள்
Smartest students  பொது அறிவு செய்திகள்

அந்த வகையில் கடந்த ஆண்டு நடந்த தேர்வில் 76 நாடுகளைச் சேர்ந்த 15,300 மாணவர்கள் பங்கேற்ற நிலையில் 27 சதவீதத்துக்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே உலகின் திறமையான மாணவர்கள் பட்டியலில் இடம் பெற்றனர்.

இதில் இந்திய-அமெரிக்க மாணவி நடாஷா பெரியநாயகமும் தொடர்ந்து 2-வது முறையாக இடம் பிடித்துள்ளார். அதேவேளை கடந்த 2021 தேர்விலும் நடாஷா பெரியநாயகம் இடம்பிடித்துள்ளார்.

மற்ற மாணவர்களைவிட இவர் அதிக மதிப்பெண் பெற்றுள்ளார். நடாஷா பெரியநாயகம் நியூஜெர்சியில் உள்ள பிளாரன்ஸ் எம்.கவுதினீர் நடுநிலைப் பள்ளியில் படிக்கிறார். நடாஷாவின் பெற்றோர் சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதுகுறித்து நடாஷா கூறுகையில் “நேரம் கிடைக்கும் போதெல்லாம் இணையதளத்தில் மூழ்கி இருப்பேன்.

அத்துடன் ஜேஆர்ஆர் டோல்கீன்ஸின் நாவல்களை படிப்பேன்” என்றார். “இந்த ஆண்டு, அமெரிக்க கல்லூரிகளில் சேர்வதற்காக எஸ்ஏடி, ஏசிடி தேர்வுகள், பள்ளி மற்றும் கல்லூரி திறன் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதில் நடாஷா மிகச்சிறப்பாக தனது திறமையை வெளிப்படுத்தி பட்டியலில் முன்னிலை பெற்றார் என இதுகுறித்து சிடிஒய் கூறியுள்ளது.

 

Kidhours – Smartest students

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.