Monday, September 9, 2024
Homeகல்விபொது அறிவு - உளச்சார்புஉலகின் நம்பர் ஒன் பணக்கார குடும்பம் பற்றி தெரியுமா? World Richest Family

உலகின் நம்பர் ஒன் பணக்கார குடும்பம் பற்றி தெரியுமா? World Richest Family

- Advertisement -

World Richest Family  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

பொதுவாக உலகிலேயே பணக்காரர் யார் என்று கேட்டால் எலான் மஸ்க், பில்கேட்ஸ், அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் உள்ளிட்டோரை பெரும்பாலானோர் தெரிந்து வைத்திருப்பார்கள். அதே நேரம் இவர்களது குடும்பம்தான் உலகிலேயே அதிக சொத்துக்களை வைத்து இருக்கிறது என்றால் அது தவறான தகவல் ஆகும்.

உலகிலேயே மிக மிக அதிகமான பணம் மற்றும் சொத்துக்களை வைத்திருக்கும் குடும்பமாக சவுதியை ஆண்டு வரும் சவுத் குடும்பம் தான். இவர்களுக்கு இந்திய மதிப்பில் ரூ. 116 லட்சம் கோடி அளவு சொத்து இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இன்னொரு தகவல் இதைவிட அதிகமாக அவர்கள் வசம் சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -

அதாவது அமெரிக்க டாலர் மதிப்பில் 1.4 ட்ரில்லியன் சொத்து இந்த சவுத் குடும்பத்திடம் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரம் உலகின் நம்பர் ஒன் பணக்காரரான டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் உரிமையாளர் எலான் மஸ்கிடம் டாலர் மதிப்பில் 251.3 பில்லியன் சொத்துக்கள் உள்ளன. பில்கேட்ஸ் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸிடம் டாலர் மதிப்பில் 119.6 பில்லியன் அளவுக்கு சொத்து இருப்பதாக பிரபல இதழான ஃபோர்ப்ஸ் கூறியுள்ளது.

- Advertisement -

இந்த சவுத் குடும்பத்தில் 15 ஆயிரத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர். ஒட்டுமொத்த செல்வமும் சுமார் 2000 உறவினர்களால் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக சவுதி அரேபியாவை நவீனப்படுத்தியவர் என்று பாராட்டப்படும் அப்துல் அஜீஸ் பின் அப்துல் ரகுமானின் பரம்பரையிடம் சொத்துக்கள் அதிகம் உள்ளன. இவரது வழியில் வந்த பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான் தற்போது சவுதி அரேபியாவை கட்டுப்படுத்தி வருகிறார்.

World Richest Family  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
World Richest Family  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

இந்த சொத்துக்களில் பெரும்பாலானது எண்ணெய் வளத்தின் மூலமாக பெறப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சவுதி அரசு குடும்பம் மிக மிக ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து வருகிறது. தங்க விமானம், தங்க கழிவறை என இந்த குடும்பம் பற்றிய சுவாரசியமான தகவல்கள் அவ்வப்போது செய்திகளில் வெளிவரும். தற்போதுள்ள சூழலில் இந்த சவுத் குடும்பத்துடைய சொத்து மதிப்பு ஆண்டுதோறும் மென்மேலும் அதிகரிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்

 

Kidhours – World Richest Family

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.