Sunday, October 6, 2024
Homeஉலக காலநிலைஇரட்டிப்பாக உருகும் பனிப்பாறைகள் ஆய்வாளர்கள் Warning Melting Glaciers

இரட்டிப்பாக உருகும் பனிப்பாறைகள் ஆய்வாளர்கள் Warning Melting Glaciers

- Advertisement -

Warning Melting Glaciers உலக காலநிலை செய்திகள்

- Advertisement -

உலகில் வாழும் மொத்த யானைகளின் எண்ணிக்கையை விட 1000 மடங்கு அதிகமான பனிப்பாறைகளை இமயமலை கடந்த 20 வருடமாக இழந்து வருவதாக ஆராச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இமயமலை இயற்கையின் அருட்கொடைகளில், ஒன்று என்று கூட சொல்லலாம். அபப்டிப்பட்ட இந்த இமயமலையில் ஏராளமான பனிப்பாறைகள் உள்ளன.

- Advertisement -

இந்த பனிப்பாறைகள் மூலமாகத்தான் கோடானக்கோடி மக்கள் குடிநீர் ஆனால் உலக வெப்பமயமாதலால் இந்த பனிப்பாறைகள் வேகமாக அதுவும் இரு மடங்கு வேகமாக உருகத்தொடங்கி இருக்கின்றன.

- Advertisement -

அந்த வகையில் ஆராய்ச்சியாளர்கள் முதன்முறையாக, இமயமலையில் பனிப்பாறைகளின் அதிகபடியான இழப்பை ஆவணப்படுத்தியுள்ளனர்.இது தொடர்பாக இணைந்து நடத்திய ஆய்வில் 2000 முதல் 2020 வரை இப்பகுதியில் உள்ள ப்ரோக்லேசியல் ஏரிகள் எண்ணிக்கையில் 47 சதவீதமும் பரப்பளவில் 33 சதவீதமும், அளவு 42 சதவீதமும் அதிகரித்தன.

இதனால் நிலப்பரப்பின் மேற்பரப்பிற்கு கீழே உள்ள பனிப்பாறைகள் அதிகபடியாக உருகி வருவதாகவும் இது சுமார் 57 கோடி யானைகளின் எடைக்கு சமம் அதாவது உலகில் வாழும் மொத்த யானைகளின் எண்ணிக்கையை விட 1000 மடங்கு அதிகம் என்று கூறியுள்ளனர்.இந்த ஆய்வு குறித்து நேச்சர் ஜியோசயின்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மத்திய இமயமலையில் மிகப்பெரிய அளவில் உருகிவரும் பனிப்பாறைகள் குறித்து மதிப்பிடப்பட்டுள்ளது.

அங்கு பனிப்பாறை உருகுவதால், அருகிலுள்ள ஏரியில் நீர்வரத்து மிக வேகமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நீருக்கடியில் நிகழும் பனிப்பாறை மாற்றங்களை செயற்கைக்கோள்களால் காண இயலாமல், குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளன.ஏனென்றால் பயன்படுத்தப்பட்ட செயற்கைக்கோள் தரவு மூலம் ஏரி நீரின் மேற்பரப்பை மட்டுமே அளவிட முடியும். ஆனால் நீருக்கடியில் உள்ள பனியை தண்ணீரால் மாற்ற முடியாது.

இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் தங்களது ஆய்வறிக்கையில் தெரிவிக்கையில், பனிப்பாறை-நீரியல் மாதிரிகளுக்கு முக்கியமான தரவுகளை வழங்குவதாகவும், மலைப்பகுதியில் நீர் வள மேலாண்மைக்கு ஆதரவளிக்கிறது என்றும் கூறியுள்ளனர்.

 

Kidhours – Warning Melting Glaciers, Warning Melting Glaciers News

 

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.