Rats Free Country சிறுவர்களுக்கான உலக செய்திகள்
2050 ஆம் ஆண்டிற்குள் நாட்டிலுள்ள ஒட்டுமொத்த எலிகளையும் அழிக்கும் முயற்சியில் நியூசிலாந்து அரசாங்கம் இறங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டில் உள்ள அரியவகை உயிரினங்களைப் பாதுகாக்கும் முயற்சியில் நியூசிலாந்து அரசாங்கம் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.அந்த வகையில் கிவி போன்ற பறவைகளின் முட்டைகளை வேட்டையாடும் எலிகளை 2050ஆம் ஆண்டுக்குள் முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
இதற்காக அரசா ங்கம் ஏராளமான பணம், அறிவியல் தொழில்நுட்ப முறைகள், மனித வளம் ஆகியவற்றை பயன்படுத்தி வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Kidhours – Rats Free Country
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.