Potato in Mars பொது அறிவு செய்திகள்
பிரித்தானியாவில் உள்ள மான்செஸ்டர் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தில் வீடு கட்ட உருளைக்கிழங்கு பயன்படும் என தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியாவில் உள்ள மான்செஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், செவ்வாய்க் கிரகத்தில் கட்டமைப்புகளை உருவாக்கப் பயன்படும் ஸ்டார்க்ரீட் (StarCrete) என்ற கலவையை உருவாக்க உருளைக்கிழங்கு பயன்படும் என ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.
இது விண்வெளி தூசி, உப்பு மற்றும் உருளைக்கிழங்கிலுள்ள மாவுச்சத்து ஆகியவற்றின் சிறப்புக் கலவையில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
மேலும் செவ்வாய்க் கிரகத்திற்கு கனரக பொருட்களை கொண்டு செல்ல இது உதவும் என்று கூறப்படுகிறது.
மான்செஸ்டர் பல்கலைக் கழகம் ஓபன் இன்ஜினியரிங் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி,
உருளைக்கிழங்கில் உள்ள மாவுச்சத்து, விண்வெளி தூசி மற்றும் உப்பு ஆகியவை மூலம் தயாரிக்கப்படும் கான்கிரீட் ஆனது வழக்கமான கான்கிரீட்டை விட வலிமையானதாகவும் செவ்வாய் கிரகத்தில் குடியேற உதவும் என தெரிவித்துள்ளது.
இது சுமார் 32 மெகாபாஸ்கல்ஸ் (MPa) அளவைக் கொண்ட மிக வலிமையுடையது ஆகும்.
உருளைக்கிழங்கு மாவுச்சத்தை தீர்மானிக்கும் முன் ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு கலவை சேர்ப்பை பயன்படுத்தி சோதித்துள்ளனர்.
அவர்கள் மனித இரத்தம் மற்றும் சிறுநீரைக் கூட வேற்று கிரக கான்கிரீட்டிற்கான கலவை செய்து பார்த்து முயன்றுள்ளனர்.
முன்னணி ஆராய்ச்சியாளர் டாக்டர் அலெட் ராபர்ட்ஸ் “synthetic spider silk கலக்கப்பட்ட பசை உருவாக்கி வருவதால் நாங்கள் இரத்தத்தைப் பரிசோதிக்கத் தொடங்கினோம், ஆனால் தற்செயலாக பசுவின் இரத்தத்திலிருந்து மலிவான புரதம் இன்னும் சிறப்பாக செயல்படுவதைக் கண்டறிந்தோம்.
பசுக்களை அவற்றின் இரத்தத்திற்காக விண்வெளிக்கு எடுத்துச் செல்வது நடைமுறையில் இல்லை, ஆனால் மனிதர்கள் எந்த ஒரு குழுப் பணியிலும் இருப்பார்கள் என்பதால், இந்த இரத்த புரதத்தின் ( Human Serum Albumin என்று அழைக்கப்படும்) மனித பதிப்பைப் பயன்படுத்தி ஆராய்வோம் என்று நாங்கள் நினைத்தோம் – அது உண்மையில் நன்றாக வேலை செய்தது.” எனக் கூறியுள்ளார்.
இதன் மூலம் எதிர்வரும் காலங்களில் செவ்வாய்க் கிரகத்தில் வீடு கட்ட உருளைக்கிழங்கு பயன்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
Kidhours – Potato in Mars
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.