Friday, November 22, 2024
Homeசிறுவர் செய்திகள்நேபாளத்தின் புதிய ஜனாதிபதி New Nepal president

நேபாளத்தின் புதிய ஜனாதிபதி New Nepal president

- Advertisement -

New Nepal president பொது அறிவு செய்திகள்

- Advertisement -

நேபாள நாட்டின் புதிய ஜனாதிபதியாக எதிர்க்கட்சி வேட்பாளர் ராம் சந்திர பௌடேல் (Ram Chandra Paudel) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

எதிா்க்கட்சியான நேபாள காங்கிரஸ் கட்சியின் வேட்பாளாராக இருப்பவர்தான் ராம் சந்திர பௌடேல்.

- Advertisement -

இது நாடாளுமன்றத்தில் 2ஆவது பெரிய கட்சியான CPN-UML கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொண்டு, அந்தக் கட்சி வேட்பாளருக்கு எதிராக பௌடேலுக்கு ஆதரவு அளித்த பிரதமா் புஷ்ப கமல் பிரசண்டாவுக்கு ஆறுதல் அளிக்கும் செய்தியாகக் கருதப்படுகிறது.

- Advertisement -

நேபாளத்தின் தற்போதைய ஜனாதிபதி வித்யா தேவி பண்டாரியின் பதவிக்காலம் இம்மாதம் 12 ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.
அவருக்கு பதிலாக அடுத்த ஜனாதிபதித் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் நேற்றைய தினம் (09) நடைபெற்றது.

இதில், நாடாளுமன்றத்தில் பெரிய கட்சியாக விளங்கும் நேபாள காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக, சாதாரண பின்புலத்தைக் கொண்ட ராம் சந்திர பௌடேல் போட்டியிட்டாா்.

அவரை எதிா்த்து முன்னாள் பிரதமா் கே.பி. சா்மா ஒலியின் தலைமையிலான CPN-UML கட்சி சாா்பில் சுபாஷ் சந்திர நெம்பாங் (Subash Chandra Nembang) போட்டியிட்டாா்.

இதில், 64.13% வாக்குகளுடன் ராம் சந்திர பௌடேல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதையடுத்து, நாட்டின் 3-ஆவது ஜனாதிபதியாக அவா் எதிர்வரும் 12 ஆம் திகதி பொறுப்பேற்கவுள்ளார்.

 

Kidhours – New Nepal president

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.