Guinness Record பொது அறிவு செய்திகள்
கின்னஸ் உலக சாதனை பக்கத்தில் ”உலகின் மிகக் குட்டையான நாயான பேர்லுக்கு (Pearl) வணக்கம் சொல்லுங்கள்” என்று கடந்த ஏப்ரல் 10 அன்று ட்வீட் செய்யப்பட்டது
குறித்த புகைப்படம் தான் பெரியளவில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளதுடன் வைரலாகியும் வருகின்றது.
செப்டம்பர் 1, 2020 இல் பிறந்த பேர்ல், 9.14 செமீ (3.59 அங்குலம்) உயரமும் 12.7 செமீ (5.0 அங்குலம்) நீளமும் இருக்கதுடன், இந்த நாய் கிட்டத்தட்ட 1 டொலர் நோட்டின் நீளம் தான் இருக்கிறது.
உலக கின்னஸ் ரெக்கார்ட் வெளியிட்ட தகவலின் படி,
இதற்கு முன்னர் உலகின் மிகச்சிறிய நாயாக அங்கீகரிக்கப்பட்ட மிராக்கிள் மில்லியின் வம்சாவழியில் வந்த பெண் நாய் தான் பேர்ல் என்று தெரியவந்துள்ளது.
இந்த பட்டத்தை மிராக்கிள் மில்லி தான் முன்பு வைத்திருந்தது.
மிராக்கிள் மில்லி, 1-பவுண்டு எடை உடையது. சிவாவாவுல் 2011 இல் பிறந்து. 2020 இல் இறக்கும் வரை 9.65 சென்டிமீற்றர் அதாவது, 3.8 அங்குல உயரமே வளர்ந்து இருந்தது. இதுதான் உலகின் மிக குள்ளமான நாயாக இருந்தது.
இந்த நிலையில், தான் பேர்ல் என்ற நாய் உலகின் குள்ளமான நாய் என்ற சாதனையை படைத்துள்ளது.
வெர்ல்ட் கின்னஸ் ரெக்கார்ட் அமைப்பும் இதனை அங்கீகரித்துள்ளதமையும் குறிப்பிடத்தக்கது.
Kidhours – Guinness Record
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.