Guinness Cake பொது அறிவு செய்திகள்
ஸ்பெயின் மாட்ரிட்டில் உள்ள பாதிரியார்கள் செல்லப் பிராணிகளை ஆசீர்வதிக்கும் நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான செல்லப் பிராணிகள் பங்கேற்று ஆசிர்வாதம் பெறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.இதற்காக நடாஷா, திருமண ஆடை வடிவில், அணியக் கூடிய வகையில் கேக் ஒன்றை வடிவமைத்துள்ளார். இந்த கேக் சுமார் 131.15 கிலோ கிராம் எடையில் உருவாக்கப்பட்டு உள்ளது.
இந்த பிரமிக்க வைக்கும் கேக் கடந்த மாதம் 15ம் தேதியன்று சுவிட்சர்லாந்தின் பெர்னில் நடந்த சுவிஸ் உலக திருமண கண்காட்சியில் வெளியிடப்பட்டது. கண்காட்சிக்கு வருகை தந்த விருந்தினர்களுக்கு கேக் வழங்கப்பட்டது. இந்த கேக் தற்போது கின்னஸ் சாதனையில் இடம்பெற்றுள்ளது.
View this post on Instagram
கின்னஸ் உலக சாதனையாளர்கள் நடாஷா வடிவமைத்த இந்த கேக் உடையின் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ 68,000க்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்றுள்ளது.
கேக்கின் கீழ் பகுதி ஒரு அலுமினிய சட்டகம் மற்றும் இரண்டு உலோக போல்ட்களைப் பயன்படுத்தி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஆடையின் மேல் பகுதி சர்க்கரை பேஸ்ட் மற்றும் ஃபாண்டண்ட் கலவையைப் பயன்படுத்தி செய்யப்பட்டுள்ளது. இதில் பொருத்தப்பட்டுள்ள சிறு பலகைகள் கேக் கீழே விழாமல் இருக்க செய்கின்றன.
இந்த திருமண வடிவிலான கேக் ஆடையை மாடல் அணிந்து நடந்து செல்லும்போது அந்த ஆடை அப்படியே இருப்பதை உறுதி செய்வதற்காக, ஆடையை அணிந்து எளிதாக நடக்க கேக்கின் அடிப்பகுதியில் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது.
Kidhours – Guinness Cake , Guinness Cake design
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.