Risk in Paris பொது அறிவு செய்திகள்
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் யூத எதிர்ப்பு தாக்குதல்கள் 330 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டை விடவும், இந்த 2023 ஆம் ஆண்டில் இந்த அதிகரிப்பு பாிவாகியுள்ளது.
இந்த ஆண்டில் 550 யூத எதிர்ப்பு தாக்குதல்கள் பதிவாகியுள்ளன.
நாஸிப்படையின் ஸ்வாஸ்திகா லட்சணைகளை வரைவது, யூதர்களை தாக்குவது, கல்லறைகளை சேதப்படுத்துவது என பல எதிர்ப்பு சம்பவங்கள் பாரிஸில் பதிவாகியுள்ளன.
பாரிஸில் இந்த ஆண்டில் 175 பேர் மேற்படி குற்றச்செயல்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறிப்பாக ஒக்டோபர் 7 ஆம் திகதி முதல் இந்த தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.
மொத்தமாக இடம்பெற்ற 550 சம்பவங்களில் 484 சம்பவங்கள் இந்த திகதியின் பின்னர் இடம்பெற்றவையாகும்.
மேற்படி தகவல்களை நேற்று செவ்வாய்க்கிழமை பாரிஸ் பொலிஸ் தலைமை அதிகாரி வெளியிட்டார்.
முன்னதாக, கடந்த நவம்பர் மாத இறுதியில் உள்துறை அமைச்சர் தெரிவிக்கையில்,
நாடு முழுவதும் இந்த ஆண்டில் 1,800 யூத எதிர்ப்பு தாக்குதல்கள் பதிவானதாக தெரிவித்திருந்தார்.
Kidhours – Risk in Paris
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.