20 Scientists Death சிறுவர்களுக்கான உலக செய்திகள்
சீனாவில் உருமாறிய கொரோனா தொற்று கோரத்தாண்டவம் ஆடி வரும் விலையில் ஒரே மாதத்தில் 20 முக்கிய விஞ்ஞானிகளை சீன இழந்துள்ளது.
கடந்த மதம் சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று பரவலும், உயிரிழப்புகளும் பல மடங்கு அதிகரித்து உள்ளன.

இந்நிலையில் சீன என்ஜினீயரிங் அகாடமியை சேர்ந்த முக்கிய என்ஜினீயர்கள் மற்றும் விஞ்ஞானிகள் 20 பேர் கடந்த ஒரு மாதத்துக்குள் உயிரிழந்துள்ளனர்.
குறிப்பாக கடந்த டிசம்பர் 15 முதல் ஜனவரி 4 ஆம் திகதிக்குள் இத்தனை மரணங்கள் நிகழ்ந்துள்ளன
அதேவேளை சீனாவின் மிகவும் புகழ்பெற்ற என்ஜினீயரிங் அகாடமியான இதில் 900-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். நாட்டின் மிகப்பெரிய திட்டங்களில் இவர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது.
இந்நிலையில் எந்தவொரு விஞ்ஞானியின் உயிரிழப்புக்கும் குறிப்பிட்ட காரணம் எதுவும் வெளியிடப்படவில்லை. அதேசமயம் ஒரு மாதத்துக்குள் இவ்வளவு முக்கிய பிரபலங்கள் உயிரிழந்திருப்பது சீனாவில் முதல் முறையாகும்.
சீனாவில் கடந்த 2017-2020 ஆண்டு காலகட்டத்தில் சராசரியாக ஆண்டுக்கு 17 பேர் உயிரிழந்து இருந்தனர். இவ்வாறான நிலையில் ஒரு மாதத்துக்குள் 20 பேர் உயிரிழந்திருப்பது அங்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
Kidhours – 20 Scientists Death
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
YouTube Channel ” kidhours