Friday, September 20, 2024
Homeசிறுவர் செய்திகள்நாட்டில் முதல் பெண் ஜனாதிபதி 1st Women President in the Country

நாட்டில் முதல் பெண் ஜனாதிபதி 1st Women President in the Country

- Advertisement -

1st Women President  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

பெருவின் முதல் பெண் ஜனாதிபதியாக 60 வயதான டினா பொலுவார்டே (Dina Boluarte) பதவியேற்றுள்ளார்.

இடதுசாரித் தலைவர் பெட்ரோ காஸ்டிலோ பதவி நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டதை அடுத்து அவர் (Dina Boluarte) பதவியேற்றார்.

- Advertisement -

நேற்று பிற்பகல் எதிர்க்கட்சித் தலைமையிலான சட்டமன்றம் காஸ்டிலோவை அகற்றுவதற்கு ஆதரவாக வாக்களித்தது.

- Advertisement -
1st Women President  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
1st Women President  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

அவர் முந்தைய நாள் சட்டமன்றத்தை தற்காலிகமாக’கலைத்து ஆணை மூலம் ஆட்சி செய்யும் திட்டத்தை அறிவித்தார்.

இது, பெருவில் சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயகத்தை மீண்டும் நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கை என காஸ்டிலோ கூறினார்.

ஆனால் இது எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் அவரது துணை ஜனாதிபதி போலுவார்டே உட்பட மற்றவர்களால் சதிப்புரட்சி முயற்சி என பரவலாகக் கண்டனம் செய்யப்பட்டது.

இதனால், எதிர்க்கட்சித் தலைமையிலான சட்டமன்றம் காஸ்டிலோவை அகற்றுவதற்கு ஆதரவாக வாக்களித்ததையடுத்து, துணை ஜனாதிபதி டினா பொலுவார்டேவை (Dina Boluarte) பொறுப்பேற்க காங்கிரஸ் அழைப்பு விடுத்தது.

இதற்கமைய டினா பொலுவார்டே (Dina Boluarte) தென் அமெரிக்க தேசத்தை வழிநடத்தும் முதல் பெண்மணி என்ற பெருமையுடன் ஜனாதிபதியானார்.

அதோடு டினா பொலுவார்டே (Dina Boluarte) 2026ஆம் ஆண்டு வரை ஜனாதிபதியாக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Kidhours – 1st Women President

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.