Tamil GK News பொது அறிவு – உளச்சார்பு
வரி வருவாய் கடுமையாக சரிவடைந்ததை அடுத்து, இளைஞர்களை அதிக மது அருந்த கோரியுள்ளது ஜப்பான் அரசாங்கம்.
கொரோனா பரவல் தொடங்கிய நாள் முதல் ஜப்பானில் மது விற்பனை மற்றும் மதுபான விடுகளில் கூட்டம் இன்றி கடும் சரிவை சந்தித்தது. இந்த நிலையில் வரி வருவாயை அதிகரிக்க திட்டமிட்ட ஜப்பான் அரசு, இளையோர்களை மது அருந்த கோரிக்கை விடுத்துள்ளது.
பொதுவாக பிறப்பு விகிதம் குறைந்து முதியோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதும் மது விற்பனையில் சரிவை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா பரவலுக்கு பின்னர் மக்களின் அன்றாட வாழ்க்கையில் மாறுதல் ஏற்பட்டுள்ளதும் மது விற்பனை சரிவுக்கு காரணமாக கூறப்படுகிறது.
இதனையடுத்து தேசிய வருவாய் முகமை பொதுமக்களிடையே போட்டி ஒன்றை அறிமுகப்படுத்தியது. அதில், இளைஞர்களை மது அருந்த தூண்ட வேண்டும், அதற்கான யோசனைகளை வழங்க கோரிக்கை விடுத்தனர்.
செப்டம்பர் 9ம் திகதி வரையில் போட்டி நடைபெற உள்ளது. தெரிவாகும் நபர்களை அழைத்து அக்டோபர் மாதம் நிபுணர்களுடன் கலந்தாய்வு ஒன்றையும் ஏற்பாடு செய்துள்ளனர்.
ஆனால், ஒரு அரசாங்கம் மக்களை மது அருந்த ஊக்குவிக்கலாமா என்ற கேள்வி பொதுமக்கள் பலரிடம் எழுந்துள்ளது. மேலும் அரசாங்க நிறுவனம் ஒன்றே இவ்வாறான திட்டங்களை முன்னெடுக்கலாமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
kidhours – Tamil GK News
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.