New Prime Minister of New Zealand பொது அறிவு செய்திகள்
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் பதவி விலகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் நியூசிலாந்து தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கிறிஸ் ஹிப்கின்ஸ், புதிய பிரதமராக பதவியேற்கவுள்ளார்.
கிறிஸ் ஹிப்கின்ஸ் முதன்முதலில் 2008 இல் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டதோடு, 2020 நவம்பர் மாதம் கொவிட் -19 தடுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் வியாழன்று ஜெசிந்தா ஆர்டர்ன் தனது பிரதமர் பதிவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
அதேவேளை நியூசிலாந்தில் அக்டோபர் மாதம் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதால் ஹிப்கின்ஸ் எவ்வளவு காலம் பதவியில் இருப்பார் என்பது நிச்சயமற்றதாக இருக்கிறது
44 வயதான ஹிப்கின்ஸ் தற்போது காவல்துறை, கல்வி மற்றும் பொது சேவை அமைச்சராக உள்ளார். அதேசமயம் அவர் தலைவராவதற்கு முதலில் ஞாயிற்றுக்கிழமை பிரதிநிதிகள் சபையில் தொழிலாளர் கட்சியால் முறையாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.
ஹிப்கின்ஸ் அந்த ஆதரவைப் பெற்றால், ஜெசிந்தா ஆர்டர்ன் தனது இராஜினாமா கடிதத்தை ஆளுநர் நாயகத்துக்கு முறையாக வழங்குவார். அதன் பின்னர் அவர் மூன்றாம் சார்லஸ் மன்னர் சார்பாக கிறிஸ் ஹிப்கின்ஸை பிரதமராக நியமிப்பார் எனவும் கூறப்படுகின்றது.
Kidhours – New Prime Minister of New Zealand
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.