Green comet பொது அறிவு செய்திகள்
சூரியனை சுற்றி நீள்வட்டபாதையில் கோள்கள், தூசி, கற்கள், பனிக்கட்டி உள்ளிட்டவை ஏராளமான கலவைகள் கற்றி வருகின்றன. அவற்றை நாம் சில நேரங்களில் வெறும் கண்களால் பார்க்கும் அளவிற்கு பூமிக்கு அருகே வருவதுண்டு. அப்படி ஒரு வால் நட்சத்திரத்தை நாம் சில நாட்களில் வெறும் கண்களால் காணலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.
கடந்த ஆண்டு புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வால்நட்சத்திரம் ஒன்று மிகவும் பிரகாசமாக பூமிக்கு அருகே வந்து செல்ல உள்ளது என அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். 50 ஆயிரம் ஆண்டுக்கு ஒருமுறை பூமிக்கு அருகில் வரும் இந்த வால் நட்சத்திரத்தை நாம் வெறும் கண்களால் கூட பார்க்கலாம் என்றும் இந்த வால்நட்சத்திரம் தற்போதைய கணிப்பின்படி வரும் பிப்ரவரி 1-ந் தேதி பூமிக்கு அருகில் வரும் என அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது.

வியாழன் கோளின் சுற்றுப்பாதையில் “சி/2022 இ3 (இசட்டிஎப்)” என்ற வால் நட் சத்திரம் சுற்றி வருகிறது. இந்த வால்நட்சத்திரத்தை விஞ்ஞானிகள் கடந்த ஆண்டு மார்ச்2-ந் தேதி கண்டுபிடித்தனர்.
அதிநவீன கேமரா மூலம் இந்த வால்நட்சத்திரம் கண்டு முதலில் இதுசிறுகோள் என கணிக்கப்பட்டது. ஆனால் தொடர் ஆய்வின் மூலம்இது வால்நட்சத்திரம் என உறுதி செய்தது நாசா. தற்போது இந்த வால் நட்சத்திரம் பூமிக்கு அருகில் வரும் என நாசா கணித்துள்ளது.
இந்த வால்நட்சத்திரம் பிப்ரவரி 1ஆம் தேதி சுமார் 4.2 கோடி கிலோமீட்டர் தூரத்தில் பூமியை கடந்து செல்ல உள்ளது. இதை பொதுமக்கள் வெறும் கண்களல் கூட பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அது இரவு நேரமாக இருந்தால் மட்டுமே அந்த வால்நட்சத்திரத்க்தை தெளிவாக பார்க்கமுடியும் எனவும் இந்த வால்நர்சத்திரத்தால் பூமிக்க எந்த பாதிப்பும் இருக்காது எனவும் தெரிவித்துள்ளனர். இந்த அரிய வால்நட்சத்திரம் அடுத்த 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு தான்மீண்டும் தெரியும்.
இதற்கு முன்னர் கடந்த 2020-ம் ஆண்டு பூமிக்கு அருகே ‘நியோ வைஸ்’ என்ற வால் நட்சத்திரம் வந்தது. அதற்கு பிறகு தற்போது தான் வெறும் கண்களால் பார்க்கக்கூடிய வால்நட்சத்திரம் பூமிக்கு அருகே வர உள்ளது.
நாசாவின் கூற்றின்படி, “C/2022 E3 (ZTF)” என்ற இந்த வால் நட்சத்திரம் வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு அரைக்கோளத்தில் ஜனவரி மாததில் பார்வைக்கு தென்படும். பின்னர் தெற்கு திசையில் நகர்ந்து பிப்ரவரி மாதத்தில் பூமியை நெருங்கி வரும்.
கணித்தபடி இதே திசையில் அந்த வால் நட்சத்திரம் பயணித்தால் அதை மக்கள் நிச்சயம் வெறும்கண்களால் பார்க்கமுடியும். இனி வரும் நாட்களில் ஏதெனினும், மாற்றங்கள் ஏற்பட்டாலும் அதிக திறனுடைய கேமராக்களால் இந்த அரிய நிகழ்வை துல்லியமாக படம் பிடிக்கயும் முடியும். சந்திரன் மங்கலாக இருக்கும் பட்சத்தில், இரவு நேரத்தில் வால் நட்சத்திரம் சற்று பிரகாசமாக காட்சியளிக்ககூடும்.
சிறந்த தொலைநோக்கியின் மூலம், அந்த வால் நட்சத்திரத்தைப் பார்த்தால், அதன் நகர்வாளை துல்லியாகக் கண்காணிக்க முடியும் என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
இந்த வால் நட்சத்திரம் உருவாகி 50 ஆயிரம் ஆண்டுகள் இருக்கலாம். கடைசியாக இந்த வால் நட்சத்திரத்தைப் பார்ந்த மனிதர்கள் பனியுகத்தைச் சேர்ந்த “ஹோமோ ஹேப் பியன்ஸ்” ஆகவே இருப்பார்கள்.
“இந்த வால்நட்சத்திரம் காட்சியளிக்கும்போது மண்டலத்தில் இருக்கும் தூசிகள் மற்றும் துகள்களுடன் சேர்ந்து பச்சை நிறத்தில் தோன்றும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
2019-ம் ஆண்டு ஜூலை பாத கணக்கின்படி 6,619 வால்நட்சத்திரங்கள் பூமியை கடந்து சென்றுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. கடைசியாக 1986-ம் ஆண்டு பூமியை தாண்டிச் சென்ற ஹாலி வால் நட்சத்திரம் இனிமேல் 2051-ம் ஆண்டு வரும் என வானியல் நிபுனர்கள் கணித்துள்ளனர்.
இதேபோல் 1997-ம் ஆண்டு எப்ரல் 1-ந் தேதி பூமிக்கு அருகே வந்த ஹுலே-பாப் என்ற வால் நட்சத்திரம் கடந்து சென்றது. இது மிகவும் பிரகாசமாக இருந்தது. இந்த வால் நட்சத்திரத்தை 540 நாட்கள் பூமியில் இருந்து தொடர்ந்து பார்க்க முடிந்தது. இது 20-ம் நூற்றாண்டின் மிக பிரகாசமான நட்சத்திரமாக பெயர் எடுத்தது.
Kidhours – Green comet,Green comet update,
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.