Cereals Agreement சிறுவர்களுக்கான உலக செய்திகள்
தனது ஏற்றுமதிக்கான தடை நீடிக்குமானால் உக்ரேனுடனான கருங்கடல் தானிய ஒப்பந்தத்தை ரத்துச் செய்யப்போவதாக ரஷ்யா மிரட்டல் விடுத்துள்ளது.
அங்காராவில் துருக்கியே வெளியுறவு அமைச்சரைச் சந்தித்தபோது ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோவ் (Sergei Lavrov) அது பற்றிக் கூறினார்.காப்புறுதி, துரித நிதிப் பரிமாற்ற முறை ஆகியவற்றின் சுணக்கத்தால் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதாகத் அவர் சுட்டினார். மாஸ்கோவின் வேண்டுகோளுக்கு ஏற்பத் தடைகளை அகற்றி மே மாதத்துக்குப் பிறகும் தானிய உடன்பாடு தொடர வழியமைக்கத் துருக்கி உறுதியளித்துள்ளது.
தானியங்களும் மற்ற பொருள்களும் உக்ரேனியத் துறைமுகங்களில் இருந்து தடையின்றி வெளியே செல்வதை உறுதி செய்கிறது தானிய உடன்பாடு.மேலும் உலகின் உணவுத் தட்டுப்பாட்டுப் பிரச்சினையைச் சமாளிக்க கருங்கடல் தானிய ஒப்பந்த உடன்பாடு உதவுகிறது
Kidhours – Cereals Agreement
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.