World Biggest Volcano புவியியல்
ஹவாய் தீவில் உள்ள உலகின் மிகப்பெரிய எரிமலையான மௌனா லோவா (Mauna Loa) வெடித்துச் சிதறியுள்ளது.
அதன்படி கடந்த 40 ஆண்டுகளில் முதல் முறையாக இந்த எரிமலை வெடித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

எரிமலை அமைந்துள்ள பகுதியைச் சுற்றியுள்ள மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், சாம்பல் விழும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் எரிமலையின் தன்மை வேகமாக மாறக்கூடும் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் எரிமலையின் நிலை “மிகவும் ஆபத்தானது” என உயர்த்தப்பட்டுள்ளது.
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.