Volcanoes Erupted by Earthquakes உலக காலநிலை செய்திகள்
நிலநடுக்கத்தால் ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் உள்ள இரண்டு எரிமலைகளில் வெடித்து ஒளிரும் எரிமலைக் குழம்புகளை உமிழ்ந்து வருகின்றன. மேலும் பெரிய வெடிப்புகள் வரக்கூடும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
மாஸ்கோவிற்கு கிழக்கே சுமார் 6,600 கிலோமீட்டர்கள் (4,000 மைல்கள்) தொலைவில் பசிபிக் பெருங்கடலில் பரவியுள்ள ஒரு தீபகற்பம், உலகின் மிகவும் செறிவான பகுதிகளில் ஒன்றாகும்.
அதே நேரத்தில் இங்கு சுமார் 30 ஆக்டிவ் வல்கனோ என்று சொல்லப்படும் வெடிக்கும் இளம் எரிமலைகள் உள்ளன.
இந்நிலையில், சனிக்கிழமையன்று ஏற்பட்ட வலுவான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இங்குள்ள இரண்டு எரிமலைகள் உயிர்பெற்றுள்ளது.
நில நடுக்கத்தால் ஏற்பட்ட புவியியல் மாற்றம் பூமிக்கு அடியில் உள்ள வெப்ப குழம்புகளை எரிமலை வழியாக வெளியேற்ற தொடங்கியுள்ளது. கரும் புகையோடு, எரிமலை குளம்புகள் வெடித்து சிதற தொடங்கியது.
4,754 மீட்டர்கள் (கிட்டத்தட்ட 16,000 அடிகள்) உள்ள க்ளூசெவ்ஸ்காயா சோப்கா என்பது , யூரேசியா பகுதியின் மிக உயரமான செயலில் உள்ள எரிமலை.
இந்த எரிமலையில் தற்போது ஒரு மணி நேரத்திற்கு 10 வெடிப்புகள் பதிவு செய்யப்படுவதாக ரஷ்ய அறிவியல் அகாடமியின் வல்கனாலஜி துறை தெரிவித்துள்ளது.
இந்த எரிமலை அமைந்துள்ள கம்சட்கா எனும் இடத்தில மக்கள்தொகை குறைவாக உள்ளது.
சுமார் 5,000 மக்களைக் கொண்ட க்ளூச்சி நகரம் இரண்டு எரிமலைகளுக்கு இடையே, ஒவ்வொன்றிலிருந்தும் 30-50 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.எரிமலைகள் தீபகற்பத்தின் ஒரே பெரிய நகரமான பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கியில் இருந்து சுமார் 450 கிலோமீட்டர் தொலைவில் உள்ளன.
பசிபிக் பகுதியில் உள்ள எரிமலையை ரிங் ஆப் பயர் என்று குறிப்பிடுவர். இங்குள்ள பெரும்பாலான எரிமலைகள் நிலத்தட்டுகள் இடையே அமைந்திருக்கும். புவியின் தட்டுகள் நாடாரும் பொது அந்த நெருப்பு குளம்புகள் விரைவாக வெளி வரும்.
நிலநடுக்கத்தால் நெருப்பு குளம்புகள் மேலும் வெடித்து பூமிக்கு மேலே வரலாம். பெரிய வெடிப்புகள் வரும் நாட்களில் ஏற்படலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர். அதனால் அந்த எரிமலையை சுற்றி அமைந்துள்ள நகரங்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரித்து வருகின்றன.
Kidhours – Volcanoes Erupted by Earthquakes
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.