Turkey Earthquake சிறுவர்களுக்கான உலக செய்திகள்
துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி இன்று அதிகாலை அப்சின் நகரில் இருந்து 23 கிலோ மீட்டர் தொலைவில் தென்மேற்கே இன்று அதிகாலை நில நடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவில் 4 ஆக பதிவானதாக அமெரிக்க புவிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
10 கி.மீ ஆழத்தில் நில நடுக்கம் மையம் கொண்டிருந்தது. நில நடுக்கத்தை உணர்ந்ததும் மக்கள் வீடுகளில் இருந்து அவசரமாக வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

நில நடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் பற்றி உடனடியாக தகவல் வெளியாக வில்லை. ஏற்கனவே நில நடுக்கத்தால் பெரும் துயரத்துக்கு உள்ளான மக்களுக்கு மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது பீதியை உண்டாக்கி இருக்கிறது
Kidhours- Turkey Earthquake
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.