Turkey Earthquake புவியியல்
துருக்கியில் நேற்று ஏற்பட்ட பாரிய பூகம்பங்களினால் துருக்கி மற்றும் சிரியாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,365 ஆக அதிகரித்துள்ள நிலையில், பூகம்பத்தினால் 20,000 பேர் உயிரிழந்திருக்கலாம் என உலக சுகாதார ஸ்தாபன அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளதாக அதிர்ச்சித்தகல் வெளியாகியுள்ளது.
துருக்கியின் காஸியன்டெப் நகருக்கு அருகில் 17.9 கிலோமீற்றர் ஆழத்தில் 7.8 ரிக்டர் அளவிலான பாரிய பூகம்பம் ஏற்பட்டது.அது தவிர ,6 ரிக்டருக்கு மேற்பட்ட 3 பூகம்பங்கள் உட்பட 4 ரிக்டருக்கு அதிகமான சக்திவாய்ந்த 50 இற்கும் அதிகமான பூகம்பங்கள் நேற்றும் இன்றும் துருக்கியில் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில், பாரிய பூகம்பத்தனால் குறைந்தபட்சம் 4365 பேர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. துருக்கியில் 2,921 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு நிவாரணமாக முகவரகமான ஏஎவ்ஏடீ தெரிவித்துள்ளது.அதோடு சிரியாவில் 1411 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை துருக்கியில் 15,834 பேர் காயமடைந்துள்ளதுடன், துருக்கியில் 7,840 பேர் இடிபாடுகளிருந்து மீட்கப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது,
இப்பூகம்பத்தால் துருக்கியில் 6,217 கட்டடங்கள் இடிந்துவீழ்ந்துள்ள நிலையில் அவற்றில் மக்கள் நிறைந்த அடுக்குமாடி குடியிருப்புகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Kidhours – Turkey Earthquake
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.