Sunday, September 8, 2024
Homeகல்விபுவியியல்உறைந்து கிடக்கும் பண்டைய உலகம்.. சொர்க பூமி என விஞ்ஞானிகள் ஆச்சரியம் Scientists Heaven of...

உறைந்து கிடக்கும் பண்டைய உலகம்.. சொர்க பூமி என விஞ்ஞானிகள் ஆச்சரியம் Scientists Heaven of Earth

- Advertisement -

Scientists Heaven of Earth சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

இப்போது பனியால் சூழப்பட்டு, மனிதர்கள் வாழ முடியாத நிலையில் இருக்கும் அண்டார்டிகாவில் ஒரு காலத்தில் தாவரங்களும், உயிரினங்களும் இருந்துள்ளன என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அதற்கான சான்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறனர். அதாவது 30 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அண்டார்டிகாவில் தாவரங்கள் இருந்துள்ளன. அங்கு விலங்கினங்கள் வாழ்ந்துள்ளன. காலப் போக்கில் பனி சூழ்ந்ததால் அவை அப்படியே உறைந்து போய்விட்டன என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

விஞ்ஞானிகள் இப்போது அண்டார்டிகாவின் பனிக்கட்டி அடுக்கின் ஆழத்தில் அமைந்துள்ள உலகின் மிக பழமையான உறைந்து போன படிமத்தை கண்டுபிடித்திருக்கிறார்கள். அது மிகவும் விசித்திரமானதாக இருப்பதாகவும், இந்த பழைய சொர்க்கத்தை கண்டுபிடித்தது மிகவும் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் தருகிறது என்று கூறுகிறார்கள் விஞ்ஞானிகள்.

- Advertisement -

இந்த பண்டைய சொர்க்கம் செவ்வாய் கிரகத்தை விட ஆச்சரியங்களும் சுவாரஸ்யங்கள் நிறைந்ததாக இருக்கும் என்கிறார்கள் இதைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.காலநிலை மாற்றம் என்பது எப்போதுமே நிகழக்கூடிய ஒன்றாக இருக்கிறது. அது எத்தகைய விளைவை உண்டாக்கும் என்பதற்கு இந்த பண்டைய சொர்க்கம் ஒரு சாட்சி என்கிறார்கள் விஞ்ஞானிகள். ஆனால் நாம் வாழும் உலகம் அண்டார்டிகாவின் குளிரிலிருந்து தப்பி கதகதப்பான சூழலில் இருப்பதால் நமக்கு பாதிப்பு இல்லை என நம்புகிறார்கள் விஞ்ஞானிகள்.

- Advertisement -
Scientists Heaven of Earth சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Scientists Heaven of Earth சிறுவர்களுக்கான உலக செய்திகள்

ஆய்வின்படி, பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உண்மையில் பிரபஞ்சம் வெப்பமாகத் தான் இருந்திருக்கிறது. ஆனால் அதையும் மீறி எப்படி பனி உருவாகத் தெராடங்கியது என்பது தெரியவில்லை என்கிறார்கள் விஞ்ஞானிகள். 14 முதல் 34 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மூன்று முதல் ஏழு டிகிரி செல்சியஸ் வெப்பமாக இருந்ததைப் போன்ற வளிமண்டல நிலைமைகளை உருவாக்கும் முயற்சியில் தாங்கள் ஈடுபட்டு வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

அதற்கான ஆய்வுகளும் நடைபெற்று வருகின்றன. இந்த புதை பண்டைய உலகத்தை மேலும் ஆய்வு செய்வது பல உண்மைகளை வெளிக் கொண்டு வரும் என விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

அண்டார்டிகாவில் பனி கட்டிகள் ஏன் நகர்கிறது, காலநிலை மாற்றத்தால் நாம் வாழும் உலகம் என்ன மாதிரியான மாற்றங்களை சந்திக்கப் போகிறது போன்றவை இந்த பழங்கால சொர்க்கத்தை ஆய்வு செய்வதன் மூலம் நமக்கு தெரிய வரும் என்றும் விஞ்ஞானிகள் நம்புகின்றனர். உலக வெப்பமயமாதல் என்னும் பிரச்னை இப்போது உலகளாவிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது.

இந்நிலையில் அண்டார்டிகா பனிக்கடியில் உறைந்து போன நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள உலகம் நமக்கு ஆச்சரியத்தை கொடுத்தாலும், காலநிலை மற்றும் பருவநிலை மாற்றம் எதனால் ஏற்படுகிறது, இந்த இரண்டையும் சம நிலையில் வைத்துக் கொள்வது எப்படி போன்ற படிப்பினைகளை இந்த பழைய சொர்க்கம் தொடர்பான ஆய்வுகள் நமக்கு கொடுக்கலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

 

Kidhours – Scientists Heaven of Earth, Scientists Heaven of Earth update

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.