Earthquake Alert of Birds புவியியல்
புத்தலைக்கு அருகில் இன்று (பிப்ரவரி 22) காலை சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் (ஜிஎஸ்எம்பி) தெரிவித்துள்ளது.
இன்று காலை 11.45 மணியளவில் 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது.ஒரு வினாடிக்கு மட்டுமே நிலம் நடுங்கியதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.அப்போது மயில்கள் உள்ளிட்ட பறவைகள் கடுமையான சத்தங்களை எழுப்பிக்கொண்டு பறந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் கூறியுள்ள அதேவேளை குறித்த பகுதியில் அண்மையில் நிலநடுக்கம் பதிவாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Kidhours – Earthquake Alert of Birds
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.