Wednesday, January 22, 2025
Homeகல்விபுவியியல்இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் 6.4 Tamil Geography News Earthquake # World Best Tamil

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் 6.4 Tamil Geography News Earthquake # World Best Tamil

- Advertisement -

Tamil Geography News Earthquake  புவியியல்

- Advertisement -

இந்தோனேசியா நாட்டின் மேற்கு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்ப்பட்டது .

Tamil Geography News Earthquake  புவியியல்
Tamil Geography News Earthquake  புவியியல்

இந்தோனேசியா நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

- Advertisement -

நிலநடுக்கம் அல்லது பூகம்பம் என்பது பூமிக்கடியில் அழுத்தம் அதிகமாகி அதனால் சக்தி வெளியேற்றப்படும் போது, தளத்தட்டுகள் நகர்வதனால் இடம்பெறும் அதிர்வைக் குறிக்கும்.

- Advertisement -

இதனை டெக்டோனிக் தட்டுகள் என்று கூறலாம். இந்த அதிர்வுகள் ரிக்டர் அளவு நிலநடுக்கமானியினால்அளக்கப்படுகிறது.

அந்த வகையில் அதிர்வுகள் 3 ரிக்டருக்கும் குறைவாக இருந்தால் நிலநடுக்கங்களை உணர்வது கடினமாகும்.

லேசான நிலநடுக்கம் ஏற்படும். அதேவேளை 7 ரிக்டருக்கும் கூடுதலான அதிர்வுகள் பதிவாகியிருந்தால் அது பூமியில் பலத்த சேதம் மற்றும் சுனாமியை ஏற்படுத்தும்.

இந்தோனேசியா நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஆச்சே மாகாணத்தில் நேற்றிரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஆச்சே மாகாணத்தின் மெயுலாபோ நகரை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 22 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அந்நாட்டு தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஆச்சே மாகாணம் முழுவதும் உணரப்பட்டது. நிலநடுக்கத்தின்போது வீடுகள், கடைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின.

இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

இந்த பயங்கர நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருட்சேதம் மற்றும் உயிர்சேதங்கள் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இதேபோல் இந்த நிலநடுக்கத்தின் காரணமாக சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.

இச்சம்பவம் இந்தோனேசியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

kidhours – Tamil Geography News Earthquake

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

புவியியல்

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.