Canada Earthquake புவியியல்
கனடாவின் சட்பரி என்னும் பகுதியில் நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது.
2.8 மக்னிடியூட் அளவில் இந்த நில நடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சட்பரி பெரும்பாக பகுதியில் வாழும் மக்கள் இந்த நில நடுக்கத்தை உணர்ந்ததாக தெரிவிக்கின்றனர்.
நகரின் வடகிழக்கு பகுதியில் சுமார் 22 கிலோ மீற்றர் தொலைவில் இந்த நில நடுக்கம் பதிவாகியுள்ளது.

சுரங்கப் பணிகளின் காரணமாக இந்த நில நடுக்கம் உணரப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
3.5 மக்னிடியூட் அளவிற்கு குறைந்த நில அதிர்வுகள் பற்றிய தகவல்கள் பதியப்பட்டாலும் அவை ஆபத்தானவை அல்ல என தெரிவிக்கப்படுகின்றது.
சட்பரியில் ஏற்பட்ட நில நடுக்கத்தினால் எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை என தெரிவிகப்படுகின்றது.
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.