Tamil Geography News உலக காலநிலை
இந்தோனேசியாவின் சுமத்ராவின் மேற்கு பகுதியில் மேற்கு கடற்கரையில் உள்ள மெண்டவாய் தீவுகளுக்கு அருகே இன்று (29-08-2022) காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
அது ரிக்டர் அளவுகளில் 6.4 ஆக பதிவானதாக அந்த நாட்டின் புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்த நிலநடுக்கம் 10 கி.மீ ஆழத்தில் இருந்தது. எனவே சுனாமி ஏற்பட வாய்ப்பு இல்லை என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் சேதம் மற்றும் உயிர் சேதம் பற்றிய தகவல் உடனடியாக வெளியாகவில்லை.
கடந்த திங்கட்கிழமை இதே இடத்தின் அருகே 5.2 ரிக்டர் அளவுகளில் 2 நிலநடுக்கம் ஏற்பட்டது. ஒரு வாரத்துக்கு பிறகு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தோனேசியா நில அதிர்வு ஏற்படும் பகுதியில் இருப்பதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதாக அந்நாட்டு புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
kidhours – Tamil Geography News
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.