Earthquake News சிறுவர்களுக்கான உலக செய்திகள்
திபெத் மற்றும் தஜிகிஸ்தான் நாட்டுகளில் நில நடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. தெற்கு திபெத் நாட்டில் உள்ள ஜிஜாங் பகுதியில் நேற்று நள்ளிரவு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியதனால் பயந்து போன பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
இந்நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோலில் இது 4.6 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ பொருட்சேதமோ எதுவும் ஏற்படவில்லை என கூறப்படுகின்றது.
அதேவேளை தஜிகிஸ்தான் நாட்டிலும் இன்று அதிகாலை 3.18 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கடியில் 150 கிலோ மீட்டர் ஆழத்தில் இது உருவானது.
ரிக்டர் அளவு கோலில் இது 4.1 ஆக பதிவாகி இருந்ததாக கூறப்படும் நிலையில் இதனால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.