Earthquake in Afghanistan புவியியல்
ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டின் ஃபாசியாபத் அருகே காலை 10.10 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளது. பாய்சாபாத்தில் இருந்து 265 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்தது
இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. இந்தநிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருளிழப்பு, உயிரிழப்பு உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.
துருக்கி-சிரியா, இந்தோனேசியாவை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டது, அந்நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.