Indonesian Earthquake உலக காலநிலை செய்திகள்
இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவானதாக அந்த நாட்டின் வானிலை மற்றும் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த நிலநடுக்கமானது கிழக்கு போலாங் மோங்கோண்டோ ரீஜென்சிக்கு தென்கிழக்கே 128 கிமீ தொலைவில் கடலுக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான விபரங்கள் ஏதும் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
270 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் பரந்த தீவுக்கூட்டமான இந்தோனேசியா, பசிபிக் படுகையில் உள்ள எரிமலைகளின் வளைவான “ரிங் ஆப் பயர்” மீது இருப்பதன் காரணமாக அடிக்கடி பூகம்பங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகளால் பாதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
Kidhours – Indonesian Earthquake
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.