Earthquake in Japan சிறுவர்களுக்கான உலக செய்திகள்
கிழக்காசிய அபிவிருத்தியடைந்த நாடாகிய ஜப்பானின் நோடா பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
குறித்த அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 5.1 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளது.
இந்த நில அதிர்வின் தாக்கம் ஜப்பானில் உள்ள இவாட்டே, அகிடா, அமோரி, ஹோகடோ மற்றும் மியாகி ஆகிய பகுதிகளில் உணரப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் இதனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை எனவும் சில இடங்களில் மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டுள்ளதுடன் சில கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் சேதவிபரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது .
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.