Thursday, November 21, 2024
Homeஉலக காலநிலைஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் Earth Quake in Afghanistan

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் Earth Quake in Afghanistan

- Advertisement -

Earth Quake in Afghanistan  உலக காலநிலை செய்திகள்

- Advertisement -

உலகம் தோன்றிய காலம் தொட்டு இன்றைய 21 ஆம் நூற்றாண்டில் உலகம் எண்ணிலடங்கா மாற்றங்களை கண்டு வருகிறது இதன் விளைவாக உலகின் பாரம்பரிய பழம் பெரும் நகரங்கள் புதிய மாற்றங்கள் காரணமாக பழமையை இழந்தும் இயற்கை பேரிடர் காரணமாக அழிவடைந்தும் மாற்றங்களை கண்டு வருகின்றன.

அப்படியிருக்கையில் இன்றும் பழமையின் தன்மை மாறாமல் பண்டைய நகரங்கள் சில பல்லாயிரம் ஆண்டுகளாக இன்றும் வரலாறையும், கலாச்சாரத்தையும் சுமந்து கொண்டு நிற்கிறது, அத்தகைய பத்து நகரங்களை பற்றி தெரிந்துகொள்வோம்.

- Advertisement -

அரபு கலாச்சாரத்தின் தலைநகரம் என்று அழைக்கப்படும் டமாஸ்கஸ்தான் தற்போதைய உலகின் மிகப் பழமையான நகரமாகும், இது பல பெரிய நாகரிகங்களின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியைக் கண்டுள்ளது.ஆய்வுகள் மற்றும் வரலாற்று சான்றுகளின்படி, டமாஸ்கஸ் முதன்முதலில் கி.மு ஏழாம் மில்லினியத்தின் இரண்டாம் பாதியில் இருந்தது.

- Advertisement -

இது உலகில் மக்கள் இன்றும் வசிக்கும் மிகப் பழமையான நகரமாகவும், அரபு உலகின் ஒரு முக்கிய கலாச்சார மையமாகவும் விளங்குகின்றது, இன்று டமாஸ்கஸ் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட ஒரு பெருநகரப் பகுதியாக உள்ளது, மேலும் இந்த நகரம் 2008 ஆம் ஆண்டில் அரபு கலாச்சாரத்தின் தலைநகராக இது பெயரிடப்பட்டுள்ளது.

அடுத்ததாக அலெப்போ நகரம் அலெப்போ கவர்னரேட்டின் தலைநகராக செயல்படுகிறது, மேலும் இது 8,000 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து மக்கள் வசிக்கும் நகரமாக இருந்து வருகிறது. கி.மு. 11,000க்கு முற்பட்ட மனிதக் குடியிருப்புகளின் எச்சங்கள் அங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது, அலெப்போ நகரமானது மத்தியதரைக் கடல் மற்றும் மொசபதேமியா இடையே அமைந்துள்ளது, மேலும் அதன் புவியியல் இருப்பிடம் காரணமாக, பண்டைய காலத்தில் இது ஒரு முக்கியமான வர்த்தக மையமாக இருந்தது. இந்த அலெப்போ நகரமானது 2012 முதல் பேரழிவைச் சந்தித்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

அடுத்ததாக பெய்ரூட்டில் இருந்து வடக்கே 42 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பைப்லோஸ் நகரம், இது லெபனானின் மவுண்ட் லெபனான் கவர்னரேட்டில் உள்ள மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய நகரமாக விளங்குகிறது, இந்த நகரமானது கிமு 8800 முதல் 7000 வரை இந்த நகரம் மனிதர்களால் முதன்முதலில் ஆக்கிரமிக்கப்பட்டதாகவும், பின்னர் கிமு 5000 முதல் மக்கள் தொடர்ந்து வசித்து வந்ததாகவும் நம்பப்படுகிறது, இந்த நகரம் ஒரு தொல்பொருள் அதிசயமாக திகழ்கிறது, ஏனெனில் பல நூற்றாண்டுகளாக மனிதர்கள் வாழ்வதனால் இங்கு பல்வேறு கலாச்சாரங்களின் எச்சங்கள் காணப்படுவதாக கூறப்படுகின்றது.

Earth Quake in Afghanistan  உலக காலநிலை செய்திகள்
Earth Quake in Afghanistan  உலக காலநிலை செய்திகள்

அதனைத் தொடர்ந்து, ஆர்கோஸ் நகரம், ஆர்கோஸ் என்பது கிரீஸின் ஆர்கோலிஸில் உள்ள ஒரு நகரமாகும் இது உலகில் தொடர்ச்சியாக மக்கள் வசித்து வரும் மிகப் பழமையான நகரங்களில் ஒன்றாகும், ஆர்கோஸ் இன்று சுமார் 22,000 குடியிருப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் ஏராளமான பழங்கால நினைவுச்சின்னங்களும் இங்கு காணப்படுகின்றன.

அடுத்து கிரேக்கத்தின் தலைநகரான ஏதென்ஸ், இது மிகப்பெரிய மக்கள்தொகையைக் கொண்ட நகரமாக விளங்குகிறது. இந்த நகரத்தின் ஆரம்பகால மனித இருப்பு கிமு 11 மற்றும் 7 ஆம் மில்லினியத்திற்கு இடையில் தொடங்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது, மேலும் இந்த நகரம் தத்துவஞானத்தின் பண்டைய இல்லமாகவும், மேற்கத்திய நாகரிகங்களின் பிறப்பிடமாகவும் விளங்குகின்றது.

 

Kidhours – Earth Quake in Afghanistan

 

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

தேடல்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.