City Like Mars உலக காலநிலை செய்திகள்
வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி ஒன்றில் கிரீஸ் நாட்டின் தலைநகரமான ஏதென்ஸ் நகரம் கடந்த செவ்வாய்க்கிழமை (23) திடீரென செம்மஞ்சள் நிறமாக காட்சியளித்ததாக கூறப்பட்டது.
புராதன ஒலிம்பிக் மைதானம் அமைந்துள்ள சின்டக்மா சதுக்கம், பார்த்தியான் ஆலயம், லிகாப்பட்டஸ் குன்றுகளை உள்ளடக்கிய பகுதிகள் உட்பட ஏதென்ஸ் நகரம் செம்மஞ்சள் நிறமாக மாறி காட்சியளித்துள்ளது.
இதனை பார்த்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்நாட்டவர்கள் அச்சமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஏதென்ஸ் நகரின் மாற்றத்துக்கு நாசா விளக்கமளித்துள்ளது.
அதாவது, வட ஆபிரிக்காவில் இருந்து கிரீஸ், சிப்ரஸ், மசிடோனியா உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தக் காலத்தில் மேகக் கூட்டங்கள் நகர்வது வழமை. குறித்த மேகக் கூட்டத்துடன் சகாராப் பாலைவனத்தின் மண் துகள்கள் கலந்துள்ளமையினால் கிரீஸ் நாட்டை செம்மஞ்சள் நிற புழுதிப் புயல் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு இந்தநிலை நீடிக்கும் என நாசா வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இந்நிலையினைக்கொண்ட ஏதென்ஸ் நகரின் புகைப்படங்கள் வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
Kidhours – City Like Mars
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.