Looks Like Heaven பொது அறிவு செய்திகள்
சுற்றுலா தளங்களின் பிரமிக்க வைக்கும் இயற்கை அழகு நம்மை வியப்பில் ஆழ்த்தக்கூடும். சில நிமிடங்கள் சொர்க்கத்தில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும்.
அத்தகைய உலகிலுள்ள சொர்க்க இடங்களைப் பற்றி பார்க்கலாம்.கனடாவில் உள்ள இந்த தேசிய பூங்கா,1885 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இங்கு வனப்பகுதி, பனிப்பாறை, ஏரிகள் உள்ளன.பூங்காவை சுற்றியுள்ள பிரமிக்க வைக்கும் மலைகள் சொர்க்கத்தில் வசிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தக் கூடும்.
ஜப்பானில் உள்ள இந்த மலர் சுரங்கப் பாதையில் சுமார் 150 விஸ்டேரியா தாவரங்கள் உள்ளன.
இது வாழ்வில் ஒரு முறையாவது கட்டாயம் பயணம் செய்ய வேண்டிய இடமாகும்.
காஷ்மீரை பூமியின் சொர்க்கம் என்று அழைக்கின்றனர்.அதன் பனி மூடிய மலைகள், இயற்கை அழகு, பள்ளத்தாக்குகள் ஆகியவற்றின் காரணமாக சுற்றுலா பயணிகளின் சொர்க்க தளமாக திகழ்கின்றது.
ஜேர்மனியில் உள்ள பிளாக் ஃபோரஸ்ட் சுமார் 160 கிலோ மீற்றர் அளவிற்கு பரந்து காணப்படுகின்றது.அடர்ந்த வனப்பகுதிகள், அழகிய கிராமங்கள், அசர வைக்கும் நீர்வீழ்ச்சிகள் என கற்பனை உலகில் பார்த்ததைப் போல் காட்சியளிக்கக்கூடும்.
அவதார் படத்தில் வரும் பகுதியில் நிஜத்தில் வசிக்க விரும்பினால் WULINGYUAN இற்கு செல்லலாம்.அது அவதார் பூமியில் நுழைந்துவிட்ட உணர்வை ஏற்படுத்தக்கூடும்.
பாமுக்கலே பகுதியில் காணப்படும் முடிவில்லா நீரூற்றுக்கள் பார்வையாளர்களை பிரமிக்க வைக்கின்றது.
இவை குணப்படுத்தும் சக்தியை கொண்டிருப்பதாக நம்பப்படுகின்றது.இப்பகுதி ஆண்டு முழுவதும் பார்வையாளர்களுக்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.இந்த அழகிய கிராமம் தனி வரலாற்றை கொண்டுள்ளது. இதன் சிறப்பு அம்சமாக பழமையான உப்பு சுரங்கத்தைக் காண முடியும்.
அதேபோல் ஓபர்டானில் உள்ள குகை உலகம், இதுவரை கிடைத்திடாத புதுமையான அனுபவத்தை தரக்கூடும்.அந்தாட்டிக்கா செல்வது வேறு ஒரு உலகத்திற்கு பயணித்த உணர்வை தரக்கூடும். இங்கு நிரந்தர குடியிருப்பு கிடையாது.சில நாடுகளின் ஆய்வு கூடங்கள் மட்டுமே உள்ளன. இது அழகும் ஆபத்தும் நிறைந்த பகுதியாகும்.
Kidhours – Looks Like Heaven
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.