Sunday, January 19, 2025
Homeகல்விகட்டுரைஅணில் பற்றிய கட்டுரை Tamil Short Essay Squirrel

அணில் பற்றிய கட்டுரை Tamil Short Essay Squirrel

- Advertisement -

Tamil short Essay Squirrel  சிறுவர் கட்டுரை

- Advertisement -

அணில் மெல்லிய உடல் மற்றும் நீளமான, வலுவான கால்கள் கொண்ட கொறித்துண்ணிகளின் வரிசையில் இருந்து ஒரு அழகான, சிறிய விலங்கு. பொதுவாக இதுபோன்ற விலங்குகள் ஒரு கிலோகிராம் எடையும், 40 செ.மீ நீளமும் கொண்டவை அல்ல, ஆனால் இனங்கள் பொறுத்து ஒன்றரை முதல் இரண்டு மடங்கு சிறியதாக இருக்கும்.

அணில் மெல்லிய உடல் மற்றும் நீளமான, வலுவான கால்கள் கொண்ட கொறித்துண்ணிகளின் வரிசையில் இருந்து ஒரு அழகான, சிறிய விலங்கு. பொதுவாக இதுபோன்ற விலங்குகள் ஒரு கிலோகிராம் எடையும், 40 செ.மீ நீளமும் கொண்டவை அல்ல, ஆனால் இனங்கள் பொறுத்து ஒன்றரை முதல் இரண்டு மடங்கு சிறியதாக இருக்கும்.
அணில் நம்முடைய வீடுகளில் அருகில் அதிகம் காணப்படக்கூடிய விலங்கு. ஏதாவது மரங்கள் உங்கள் வீட்டின் அருகில் இருந்தால் கண்டிப்பாக உங்களால் தினமும் அணிலை பார்க்க முடியும்.

- Advertisement -

கொஞ்சம் பழகினால் சர்வசாதாரணமாக நம்முடைய பக்கத்தில் வரக்கூடிய விலங்கு இந்த அணில். பல வீடுகளில் இந்த அணிலை செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறார்கள். ஏசி பயன்படுத்துபவர்களுக்கு அணிலை பார்த்தால் கொஞ்சம் பயம்.

- Advertisement -

அதற்கு காரணம் ஏசியில் வெளியே இருக்கக்கூடிய அவுட்டோர் யூனிட்டில் அணில் கூடு கட்டி குஞ்சு பொரிக்கும். பல இடங்களில் கூடு கட்டியதால் ஏசி பழுதுப்பட்டிருக்கிறது. மற்றபடி காய்,கனிகளை தரக்கூடிய மரங்கள் செடி கொடிகள் வைத்திருக்கும் பலருக்கும் இது கொஞ்சம் தொந்தரவைக் கொடுக்கும்.சாப்பிடக்கூடிய எந்த காயாக, கொட்டையாக இருந்தாலும் இதை அணில்கள் விடாது. பழுக்கும் முன்னாலேயே கொஞ்சம் கொஞ்சமாக மரத்தில் இருக்கக்கூடிய காய், கொட்டை வகைகளை அழித்து நாசம் செய்யும்.

உணவுகளை சேமித்து வைப்பதில் அணில்களுக்கு கொஞ்சம் அதிகமாகவே ஆர்வமிருக்கும். சுறுசுறுப்பாக காய்கறிகளை சேமித்து வைக்கும். இதனால் ஒரு சில நன்மைகளும் உண்டு. அப்படி அணிலை பற்றிய சில சுவாரசியமான நீங்கள் அறிந்திராத தகவல்கள் பற்றி பார்க்கலாம்.

Tamil short Essay Squirrel  சிறுவர் கட்டுரை
Tamil short Essay Squirrel  சிறுவர் கட்டுரை

இந்தியாவில் அணிலை இந்திய மலை அணில் எனவும் மலபார் மலையணில் எனவும் அழைக்கப்படுகிறது.
அணில் மரத்தில் வசிக்கக்கூடிய ஒரு கொறித்துண்ணி வகையாகும்.

அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் ஆப்பிரிக்காவை தாயகமாகக் கொண்ட அணில்கள் அதன்பிறகு ஆஸ்திரேலியாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

40 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே அணில்கள் வாழ்ந்துள்ளன என ஆராய்ச்சிகள் கூறுகின்றன
இந்தியாவிலுள்ள அணில்கள் இந்தியன் பார்ம்ஸ் ஸ்கொரில்ஸ்(Indian palm squirrel)என அழைக்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள அணில்களுக்கு முதுகில் மூன்று கோடுகள் இருக்கும். ஐந்து கோடுகள் உள்ள அணில்கள் வட இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பல இடங்களில் செல்லப்பிராணியாக வளர்க்கப்படுகிறது.

அணில் ஏன் எப்பொழுதும் கொறித்துக்கொண்டே இருக்கிறது தெரியுமா? அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. அணிலுக்கு 4 முன்பற்கள் இருக்கும். இந்த முன்பற்கள் மிக நீளமாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் கூர்மையாகவும் தொடர்ந்து வளரக்கூடிய தன்மை கொண்டது.

இது ஆண்டுக்கு ஆறு அங்குல அளவில் வளரும். இதனால்தான் அணில்கள் மரப்பட்டை, கொட்டைகளை மற்றும் கையில் கிடைத்தவற்றை தொடர்ந்து கொறித்துக் கொண்டே இருக்கும். இப்படி அணில்கள் கொறிக்காவிட்டால் பற்கள் தொடர்ந்து நீளமாக வளர்ந்துவிடும்.
அப்படி நீளமாக வளர்ந்து விட்டால் அதன் வாயை அசைக்க முடியாது. இதனால் அவையில் பட்டினி கிடந்து இறக்கவும் நேரிடும். ஆகையால் தான் எப்பொழுது பார்த்தாலும் அணில்கள் கொறித்து கொண்டே இருக்கிறது.

அணில்களிடம் முக்கியமான ஒரு சிறப்பு குணம் உள்ளது. அணில் குட்டிகளின் தாய் உணவு தேடச் செல்லும் பொழுது மற்ற விலங்குகளால் கொல்லப்பட்டால் அதன் குட்டிகளை மற்ற அணில்கள் தத்தெடுத்து வளர்க்கும் இயல்பு கொண்டது. ஒரு கூட்டுக் குடும்பம் போல இவைகளின் வாழ்க்கை வாழ்க்கை இருக்கும்.

புதிதாக பிறந்த அணில் குட்டி ஒரு இன்ச் நீளம் மட்டுமே இருக்கும்.

Tamil short Essay Squirrel  சிறுவர் கட்டுரை
Tamil short Essay Squirrel  சிறுவர் கட்டுரை

அணில் மரத்தில் இருந்து எடுக்கும் பழ கொட்டைகளை எல்லாம் பிறகு சாப்பிடுவதற்காக ஒளித்து வைத்திருக்கும். ஆனால் இதில் 30 சதவிகிதத்தை மட்டுமே திரும்ப எடுக்கும். மீதி 70 சதவிகிதத்தை மறந்து விடும்.

அது மட்டுமல்லாமல் ஒரு அணில் மறைத்து வைத்திருக்கும் கொட்டைகள் வேறு பல விலங்குகளாலும், பிற அணில்களும் சாப்பிடும். அது போக மீதி இருக்கும் 70 சதவிகிதம் கொட்டைகளை அணில் மறந்து போவதால் அந்த கொட்டைகளிலிருந்து அதிக மரங்கள் முளைக்கிறது.

இதனால் மறைமுகமாக அதிக அளவில் மரங்களை காடுகளில் வளர உதவி புரிகிறது. இப்படி காட்டை பாதுகாத்து வளர்ப்பதில் அணிலுக்கு முக்கிய பங்கு உண்டு.
அணிலால் உடல் நீளத்தைப் போல 10 மடங்கு தூரத்திற்கு குதிக்க முடியும்.

அணிலின் பார்வை திறன் மிகவும் கூர்மையாக இருக்கும். இதனால் மிக விரைவாகவே மற்ற எதிரி விலங்குகள் எங்கு செல்கிறது, எங்கு இருக்கிறது என தெரிந்து கொண்டு அதற்கேற்ப எதிரி விலங்குகளிடம் சிக்காமல் விரைவாக தப்பி செல்லும்.

காட்டில் வாழும் பாலூட்டி விலங்குகளில் அணில் மட்டுமே அதிகமாக பகலில் வெளியே சுற்றித் திரியும்.

கிரேக்க மொழியில் அணிலை ஷாடோ டெயில் (Shadow Tail) என அழைக்கிறார்கள்.

ஒரு ஆண் அணில் பெண் அணிலை சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தாலும் அதன் மணத்தை வைத்து கண்டுபிடித்து விடுமாம்.

அணில்கள் இனப்பெருக்க காலம் பிப்ரவரி முதல் மே மாதம் வரை. கர்ப்பகாலம் மொத்தம் 44 நாட்கள். பொதுவாக ஒரு கர்ப்பத்தில் 2 முதல் 4 குட்டிகள் வரை ஈனும்.

ஆஸ்திரேலியா, அண்டார்டிகா என ஒவ்வொரு கண்டத்திலும் மொத்தமாக 275 வகையான அணில்கள் உள்ளன.

அணில்கள் ஒவ்வொரு வாரமும் தங்களுடைய உடல் எடை அளவிற்கு சாப்பிடும். சராசரியாக வாரத்திற்கு 680 கிராம் உணவை சாப்பிடும்.

அணில் 30 மீட்டர் உயரத்திலிருந்து கீழே விழுந்தாலும் அதற்கு எந்த காயமும் ஏற்படாது. கீழே குதிக்கும் பொழுதும் விழும் பொழுதும் அணில் தன்னுடைய வாலை சமநிலையில் பாராசூட்டை போல வைத்துக் கொள்ளும். இதனால் எந்த காயமும் அணிலுக்கு ஏற்படாது.
அணில் மிகவும் திறமைசாலி ஆனது. தன்னுடைய உணவை தேடுவதற்காக அது பலவிதமான குறுக்கு வழிகளைக் கையாள்கிறது. பல வழிகளை மேற்கொண்டு மிகவும் புத்திசாலித்தனமாக, தந்திரமாக, எளிய வழிகள் மூலம் அது தன்னுடைய உணவை தேடுகிறது.

அணில்கள் பொதுவாக மணிக்கு 16 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடக்கூடியவை. இருந்தாலும் ஒருசில அணில்கள் மணிக்கு 32 கிலோமீட்டர் வேகத்தில் ஓடியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அணில்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்ள பல்வேறு வகையான சப்தங்களையும், ஒலிகளையும் ஒருசில வாசனை மூலமாகவும் தொடர்பு கொள்கின்றன. ஆபத்து ஏற்படும் போது மற்றவர்களை எச்சரிக்க அணில் தன்னுடைய வாலை பயன்படுத்துகிறது
அணில் இனங்களில் மிகச்சிறியது ஆப்பிரிக்க பிக்மி அணில் ஆகும். இது சுமார் 10 சென்டிமீட்டர் நீளம் கொண்டது.

மிகப்பெரிய அணில் இந்திய ராட்சத அணில் (Indian giant squirrel ) ஆகும். இது 3 அடி நீளம் வரை வளரும்.

அணில்களில் 44 வகையான பறக்கும் அணில் வகைகள் இருக்கிறது தெரியுமா உங்களுக்கு. உண்மையில் இது பறப்பதைப் போல இருந்தாலும் உடலில் இரு பக்கமும் ஒரு விரியும் சவ்வை பயன்படுத்தி காற்றில் சறுக்கி செல்கிறது.
அது அதனுடைய மணிக்கட்டிலிருந்து கணுக்கால் வரை நீண்டிருக்கும் சவ்வை விரித்து ஒரு பாராசூட்டில் மனிதர்கள் இறங்குவது போல இறங்கும். இது இயற்கை அணிலுக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு.

இந்திய பனை அணில்கள் 6 முதல் 7.8 அங்குல நீளம் வரை இருக்கும். அணில் எடை 99 முதல் 127 கிராம் எடை வரை இருக்கும். அணில் தன்னுடைய குட்டிக்கு 10 வாரம் வரை பாலூட்டும். அணில் 9 மாத வயதில் பாலியல் முதிர்ச்சி பெறுகிறது. இந்திய அணில் இரண்டு முதல் நான்கு ஆண்டுகள் காடுகளிலும், வீட்டில் வளர்க்கும் பொழுது 5.5 ஆண்டுகள் வரை வாழும்.

 

KIdhours- Tamil short Essay Squirrel, Best Tamil short Essay Squirrel

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.