Friday, November 22, 2024
Homeகல்விகட்டுரைகட்டுரை சான்றோர் வளர்த்த தமிழ் Tamil Essay About Tamil

கட்டுரை சான்றோர் வளர்த்த தமிழ் Tamil Essay About Tamil

- Advertisement -

Tamil Essay About Tamil  சிறுவர் கட்டுரை

- Advertisement -

“தமிழுக்கு அமுதென்று பெயர் இன்பத்தமிழ் எங்கள் உயிரிற்கு நேர்” என்று பாடிய பாவேந்தர் பாரதிதாசன்

தமிழ் எமக்கு வெறும் மொழியல்ல எமது உணர்வு எம் தாய்க்கு நிகராக அதனை போற்றுதல் வேண்டும்.

- Advertisement -

எமது முன்னோர்கள் “உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கென” வாழ்ந்தவர்கள் தாம் மடிந்தாலும் தமிழை வாழவைக்க வேண்டும் என்பது அவர்களின் பேரவா தமிழனாய் பிறந்ததையிட்டு அவர்கள் பெருமைப்பட்டார்கள்.

- Advertisement -

அதனால் தமிழ் அன்னையை அழகுபடுத்த அழகிய தமிழிலக்கியங்களை படைத்து தமிழ் வளர்த்தார்கள் இதனால் தான் தமிழ் என்றும் மங்கா புகழுடைய மொழியாக உள்ளது.

இதனை பாரதிதாசன் பாடுகையில் “சாவிலும் தமிழ் படித்து சாக வேண்டும் என் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்” என்று உணர்ச்சி பொங்க பாடுகிறார்.

தமிழிலக்கிய வரலாற்று காலங்களில் எம் சான்றோர்கள் வளர்த்த தமிழ் பற்றி இக்கட்டுரையில் நோக்கலாம்.

காற்றினால் ஏற்படும் ஓசையை ஒளியாக்கி, அதற்கு வரிவடிவம் தந்து, மொழிகள் நிலைபெறச் செய்த மனிதனின் செயலுக்கு இணையான படைப்போ கண்டுபிடிப்பு இதுகாறும் தோன்றவில்லை என்பதே உண்மை, அவ்வாறு தோன்றிய முதல் மொழி தமிழ் மொழி தான் என்பது மிகவும் பெருமைக்குரிய ஒன்றாகும். இத்தமிழ்மொழி சான்றோர்கள் பலரின் தியாகத்தாலும் உழைப்பாலும் அது இன்று உயர்தனிச் செம்மொழியாக நிலைபெற்று நிற்கிறது. மொழி வளர்த்த சான்றோர்கள் சிலரைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்தகுடி எனத் தமிழினத்தின் தென்மையைப் புறப்பொருள் வெண்பாமாலை கூறுகிறது. தமிழின் நன்மையைக் என்றுமுள தென்தமிழ்” என்பார் கம்பர், ‘உலகம் வேரூன்றிய நாள் முதல் உயிர்மொழி” என்றார் பாவலரேறு பெருஞ்சித்திரனார்.

தமிழ் மொழியால் ஈர்க்கப்பட்டு தமிழாய் மலர்ந்து, மணம் பரப்பி என்றும் தமிழுலகில் அழியாப்புகழ் பெற்றவர். திருக்குறளை நாற்பதாண்டுகள் படித்துச் சுவைத்த போப் அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 1886 ஆம் ஆண்டு வெளியிட்டு திருக்குறளின் பெருமையை உலகறியச்செய்தார். ஆங்கில மொழியை அன்னை மொழியாகக் கொண்ட போப் இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்’ என தனது கல்லறையில் எழுதுமாறு இறுதிமுறியில் எழுதி தன்னைத் தமிழராகவே ஆக்கிக் கொண்டார்

Tamil Essay About Tamil  சிறுவர் கட்டுரை
Tamil Essay About Tamil  சிறுவர் கட்டுரை

இத்தாலி நாட்டில் பிறந்த வீரமாமுனிவர் தமிழகம் வந்து தமிழைக் கற்றார். தமிழ்மொழிப் பற்றினால் ‘தைரிய நாதர்’ என முதலில் சூட்டிக்கொண்ட தனது பெயரைத் தனித்தமிழாக்கி ‘வீரமாமுனிவர்’ எனச் சூட்டிக் கொண்டார். இவர் தமிழில் முதன்முதலாகச் சதுரகராதி என்னும் அகரமுதலியை வெளியிட்டார்,

யாழ்ப்பாணம் நல்லூரில் பிறந்த ஆறுமுகனாரது மொழித்திறமையையும் வாக்கு வன்மையையும் பொருள் விளக்கும் தன்மையையும் கண்ட திருவாதுறை ஆதினத்தார் இவருக்கு நாவலர் என்னும் பட்டத்தை அளித்தனர், இவரை ‘வசனநடைகைவந்த வல்லாளர்’ எனப் பரிதிமாற் கலைஞர் பாராட்டியுள்ளார். ஆறுமுக நாவலர் சென்னையில் அச்சுக்கூடம் அமைத்து சிறந்த தமிழ் நூல்களைப் பதிப்பித்து அனைவரும் தமிழ் சுவைக்கச் செய்தார்.

முதல், இடை, கடை ஆகிய முச்சங்கங்கள் அமைத்து தமிழை வளர்த்தனர் தமிழ்ப் புலவர்கள்.அச்சங்கங்கள் கடற்கோளால் கொள்ளப்பட்ட பின்னர் பரிதிமாற் கலைஞர், உவே. சாமிநாதர், இராகவனார் ஆகிய பேராசிரியர்கள் துணையுடன் பாசுகர சேதுபதி தலைமையில் பாண்டித்துரை மேற்பார்வையில் மதுரையில் நான்காம் தமிழ்ச் அமைத்துத் தமிழை வளர்த்தனர் தமிழர்,

உலகிலேயே மொழிக்காக, முதன்முதலில் மாநாடு நடத்திய நாடு மலேசியா, அதுவும் தமிழ் மொழிக்காக நடைபெற்றது. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் இன்றும் தமிழ் ஆட்சி மொழியாகத் திகழ்கிறது. காரணம் அவ்விடங்களில் குடிபெயர்ந்த தமிழர்களின் தமிழ்ப்பற்றும் தமிழை வளர்க்கும் நோக்கமுமேயாகும்,

குமரிக் கண்டத்தில் தோன்றிய தமிழினம் உலகமெலாம் பரவித் தன்புகழை நிலைநாட்டி வருவதற்குக் காரணம் தமிழ்ச் சான்றோர்களின் தியாகமே என்றால் மிகையாகாது.

இன்றைக்கு பலபேருடைய மனவேதனை தமிழ் அழிவடைகின்றது என்பதாகும்.

உண்மை தான் எம் சொந்த மொழியின் பெருமையறியாது பிற மொழி மோகம் கொண்டு அதனை பெருமையாக நினைக்கும் மடமை மிகுந்தோர் அதிகமே

இருப்பினும் இன்றைக்கும் உலகின் எல்லா மொழிக்கும் மூத்த மொழியாக தமிழ் தான் உள்ளது செம்மொழி என்ற பெருமைக்குரியது எம் தாய்மொழியாகிய தமிழ் மொழி.

இணையத்திலும் இன்று தனக்கான இடத்தை தமிழ் கொண்டுள்ளது எமது தேவைக்காக பிறமொழிகளை கற்றாலும் கூட தமிழை போற்றுவோம்.

அதனை வளர்ச்சியடைய செய்ய நாம் ஒன்று படுவோம் தமிழராய் பெருமை கொள்வோம்.

சான்றோர் வளர்த்த தமிழை நாமும் வளர்த்து பெருமையடைய செய்வோம் இனி ஒரு விதி செய்வோம்.

 

Kidhours – Tamil Essay About Tamil , Tamil Essay About Tamil language ,Tamil Essay About

Tamil  update

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.