Tamil Earthquake News Today சிறுவர்களுக்கான உலக செய்திகள்
ஈரானின் தெற்கே அமைந்துள்ள கிஷ் தீவில் அடுத்தடுத்து 7 நிலநடுக்கங்கள் ஏற்பட்டதில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய் உள்ளிட்ட பெர்சிய வளைகுடா பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
ஹார்மோஸ் ஜலசந்திக்கு அருகில் உள்ள தீவில் 6 ரிச்டர் என்ற அளவில் 4 அதிர்வுகளும், 5.3 ரிச்டர் புள்ளியில் ஒரு அதிர்வும் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கட்டாரிலும் ரிக்டர் அளவுகோளில் 5.3 புள்ளிகளாக நிலநடுக்கம் பதிவானது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், நில நடுக்கத்தின் அதிர்வுகள் நாடு முழுவதும் உணரப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
ஈரான் சராசரியாக ஒரு நாளைக்கு ஒரு நிலநடுக்கத்தை எதிர்நோக்கின்றதாக தெரியவந்துள்ளது.
2003 ஆம் ஆண்டு 6.6 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதில் வரலாற்று நகரமான பாம் தரையிறங்கியதோடு, 26,000 பேர் உயிரிழந்துள்ளனர்.
2017 ஆம் ஆண்டு மேற்கு ஈரானில் ஏற்பட்ட 7 ரிச்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 600 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததோடு, 9,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
kidhours – Tamil Earthquake News Today
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.