Wednesday, January 22, 2025
Homeசிறுவர் செய்திகள்முதல்முறையாக வடகொரிய ஜனாதிபதி மகள் Daughter of the North Korean President

முதல்முறையாக வடகொரிய ஜனாதிபதி மகள் Daughter of the North Korean President

- Advertisement -

Daughter of the North Korean President சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

வடகொரிய அதிபர் கிம்-ஜாங்-உன் தனது மகளுடன் உலகின் முன் முதல் முறையாக தோன்றியுள்ளார்.

வடகொரியா என்றாலே எல்லோர் நினைக்கும் வருவது ஏவுகணை சோதனைதான். செய்தித்தாள்களில் வடகொரியா குறித்து அதிகமான செய்திகள் ஏவுகணை சோதனை குறித்தே வரும்.

- Advertisement -

அமெரிக்க படைகளுடன் தென்கொரியா ராணுவம் நடத்தி வரும் தொடர் கூட்டு பயிற்சிக்கு, வடகொரியா கடும் கண்டனம் தெரிவிக்கும் வகையில் சமீபகாலமாக தொடர்ச்சியாக வடகொரியா சோதனைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளது.

- Advertisement -
Daughter of the North Korean President சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Daughter of the North Korean President சிறுவர்களுக்கான உலக செய்திகள்

 

ஜப்பானை ஒட்டிய வான்வெளியில் வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை செலுத்தி சோதனை செய்வதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில்தான், சமீபத்திய ஏவுகணை சோதனையின்போது யாரும் எதிர்பார்க்காத நிகழ்வு ஒன்று நடந்தேறியுள்ளது. கண்டம் விட்டு கண்டம் பாயும் 17 ஏவுகணைகளை நேற்று வடகொரியா சோதனை செய்தது.

இந்த சோதனையின்போது வடகொரிய அதிபர் கிம்-ஜாங்-உன் வருகை புரிந்திருந்தார். அவருடன் அவரது மகளும் வருகை தந்ததுதான் ஆச்சர்யமான தகவல். உலகிற்கு கிம்-ஜாங்-உன் மகள் வெளியே தெரிவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

கிம்-ஜாங்-உன் மகளின் பெயரை வடகொரிய அரசு வெளியிடவில்லை. அவருடன் கைக்கோர்த்தபடி வந்திருந்த மகள், வெள்ளை நிறை கோட் அணிந்திருந்தார்.

வடகொரிய அதிபரான கிம்-ஜாங்-உன்னிற்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருப்பதாக தெரிகிறது. இதற்கு முன்பாக, அமெரிக்காவைச் சேர்ந்த பேஸ்கட் பந்து வீரர் டென்னிஸ் ரோட்மேன் கிம்-ஜாங்-உன்னின் மகள் குறித்த தகவலை தெரிவித்து இருக்கிறார்.

அப்போது, கிம்-ஜாங்-உன்னிற்கு ஜு ஏய் என்ற மகள் இருக்கிறார் என்று கூறினார். அதேபோல், கிம் மகள் குறித்து அமெரிக்காவைச் சேர்ந்த நிபுணர் கூறுகையில், “கிம்-ஜாங்-உன் மகளுக்கு 12-13 வயது இருக்கும்.

அவர் பல்கலைக்கழகத்தில் பயில்வதற்கோ அல்லது ராணுவத்தில் சேர்வதற்கோ தயாராகிக் கொண்டிருக்கிறார்” என்கிறார்.

2011-ம் ஆண்டிற்கு பிறகு வடகொரியாவின் முதன்மையான தலைவராக கிம்-ஜாங்-உன் உருவெடுத்தார். கிட்டதட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக அவர் தலைமைப் பொறுப்பில் உள்ள நிலையில் அவருக்கு பின் தலைமைப் பொறுப்பிற்கு யார் வருவது என்பது குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

கிம்மின் தங்கையோ அல்லது அவரது ஆதரவாளர் யாரேனும் அடுத்த தலைமைக்கு வரலாம் என்ற பேச்சுக்கள் அவ்வவ்போது அடிபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 

Kidhours – Daughter of the North Korean

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.