Typhoon Saola உலக காலநிலை செய்திகள்
சீனாவின் ஹொங்கொங்கின் குவாங்டாங் மாகாணத்தில் ஹுய்டாங் கவுன்டி பகுதியில் இருந்து தைஷன் நகரை நோக்கி சாவோலோ சூறாவளி இன்று (02) காலை கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இந்த சூறாவளியானது, தொடர்ந்து மத்திய குவாங்டாங் அருகே மேற்கு நோக்கி நகர்ந்து செல்ல கூடும் என சீன தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் மணிக்கு 200 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசும் சூழலும் காணப்படுகிறது.இதனால், முன்னெச்சரிக்கையாக 8 இலட்சம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக நேற்று (01) மதியம் முதல் இன்று காலை 10 மணி வரை 460 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக செய்திகளை இன்றைய மாலை நேர செய்தி தொகுப்பில் காணுங்கள்
Kidhours – Typhoon Saola
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.