Tamil Climate News Update Lightning சிறுவர்களுக்கான உலக செய்திகள்
கனடாவின் சஸ்கட்ச்வான் பகுதியில் பண்ணை ஒன்றில் வளர்க்கப்பட்ட 28 மாடுகள் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளன.
இவ்வாறு மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி மாடுகள் பலியானவை பொருளாதார ரீதியாகவும் உளரீதியாகவும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக பண்ணையின் உரிமையாளர் கிளேன் பியரே தெரிவித்துள்ளார்.நான்கு தலைமுறைகளாக கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருவதாக பண்ணை உரிமையாளர் குறிப்பிடுகின்றார்.
காலை வேளையில் பண்ணைக்கு சென்று பசுக்கள் மற்றும் காளைகளை பார்த்தபோது அவை அனைத்தும் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதை அவதானித்துள்ளனர்.முதல் நாள் இரவில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தங்களது கால்நடைகள் உயிரிழந்த சோகத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து இன்னமும் மீள முடியவில்லை என கிளெனின் மனைவி தெரிவித்துள்ளார்.
இந்த இழப்பு பாரிய அளவில் பொருளாதார ரீதியாக தம்மை பின்னடைய செய்துள்ளதாக பண்ணை உரிமையாளர் குறிப்பிட்டுள்ளார்.
kidhours – Tamil Climate News Update Lightning
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.