Tamil Climate News Sleet உலக காலநிலை
ஸ்பெயினில் பெய்த ஆலங்கட்டி மழை 20 மாத குழந்தையின் உயிரை பறித்திருப்பது அங்குள்ள மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஸ்பெயின் நாட்டின் வடகிழக்கு பகுதியான கேட்டாலோனியாவில் (catalonia) பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.
இதன்போது பெய்த ஆலங்கட்டி மழை உள்ளங்கை அளவுக்கு 4 அங்குலவிட்டத்தில் கொட்டியதால் சாலைகளில் நடந்து சென்றவர்கள் படுகாயமடைந்தனர்.
வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே இந்த ஆலங்கட்டி மழையால் நகரின் பல பகுதிகள் கடுமையாக சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
வீட்டின் மேற்கூரைகள், மின் கேபிள்கள், ஜன்னல்கள் பலத்த சேதமடைந்துள்ளன. சரமாரியாக ஆலங்கட்டி மழை பெய்து தாக்கியதில் 50-க்கும் மேற்பட்டோருக்கு எலும்புகள் உடைந்ததாக கூறப்படும் நிலையில், 20 மாத குழந்தை ஒன்று உயிரிழந்த சோகமும் நேர்ந்துள்ளது.
காயங்களுடன் உயிருக்கு போராடிய அக்குழந்தையை மருத்துவமனையில் சேர்த்த நிலையில், சிகிச்சை பலனின்றி அக்குழந்தை உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கேட்டாலோனியா பகுதிக்கு ஆலங்கட்டி மழை புதிதல்ல. ஆண்டு முழுவதும் குறிப்பாக மார்ச் மற்றும் மாதங்களில் இங்கு ஆலங்கட்டி மழை பெய்வது வழக்கம் எனினும் இந்த அளவுக்கு பெரிய ஆலங்கட்டிகள் பலத்த காற்றுடன் தாக்குவது 2002 ஆம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல்முறை என நகரவாசிகள் தெரிவித்தனர்.
அதேவேளை ஸ்பெயின் வானிலை மையம் மீண்டும் பலத்த ஆலங்கட்டி மழைக்கு வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுத்திருப்பதால் உள்ளூர் மக்கள் அச்சத்துடன் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.
kidhours – Tamil Climate News Sleet
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.